முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தேசிய மற்றும் சர்வதேச கல்வி வல்லுனர்கள் தலைமையில் 36 கருப்பொருட்களில் குழு விவாதங்கள் நடக்கிறது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ‘இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாடு-2026’ நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து தேர்தல் மேலாண்மை அமைப்புகள் பங்கேற்கின்றன.

சுமார் 100 சர்வதேச பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் 4 ஐ.ஐ.டி.கள், 6 ஐ.ஐ.எம்.கள், 12 என்.எல்.யு.க்கள் மற்றும் ஐ.ஐ.எம்.சி. உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தேசிய மற்றும் சர்வதேச கல்வி வல்லுனர்கள் தலைமையில் 36 கருப்பொருட்களில் குழு விவாதங்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டின் முன்னோட்டமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் நடத்தியது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சர்வதேச மாநாட்டின் நுணுக்கங்கள் மற்றும் அவற்றின் குறிப்பிட்ட பாத்திரங்கள் குறித்து விளக்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து