முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-16

சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். அண்ணாதுரை விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு கவுரவித்தார். விருது பெற்றவர்களுக்கு விருது தொகையாக ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. 

தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதன்படி, திருவள்ளுவர் விருது, ஈ.வெ.ரா., விருது, அம்பேத்கர் விருது, அண்ணாதுரை விருது, காமராஜர் விருது, பாரதியார் விருது, கலைஞர் விருது உள்பட பல விருதாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று (ஜன.16) காலை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவள்ளுவர் விருது பேராசிரியர் சத்தியவேல் முருகனாருக்கும், ஈ.வெ.ரா., விருது வழக்குரைஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வனுக்கும், அண்ணாதுரை விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், காமராஜர் விருது - எழுத்தாளர் இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், திரு.வி.க., விருது - முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பேராசிரியர் செல்லப்பாவுக்கும், கலைஞர் கருணாநிதி விருது எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட விடுதலை விரும்பி ஆகியோருக்கும் வழங்கி கவுரவித்தார்.

இதேபோல், இலக்கிய மாமணி விருதுகளில், மரபு தமிழ் விருது - எழுத்தாளர் ராமலிங்கத்துக்கும், ஆய்வு தமிழ் விருது எழுத்தாளர் மகேந்திரனுக்கும், படைப்புத் தமிழ் விருது எழுத்தாளர் நரேந்திரகுமாருக்கும் வழங்கப்பட்டது. விருது தொகையாக ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விருதாளர்களுக்கு தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் எழுத்தாளர் இதயத்துல்லா இருவரும் தங்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து