முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2026      தமிழகம்
Kalingarayan-2026-01-18

ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் 1270 ஆம் ஆண்டு காளிங்கராயன் கால்வாயை வெட்டத் தொடங்கினார். சுமார் 12 ஆண்டுகள் கழித்து கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயர் பாளையத்தில் தொடங்கிய பணி ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. காலிங்கராயர் கால்வாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பகுதியில் பெரும்பாலும் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலிங்கராயருக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சந்திரகுமார் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். காலிங்கராயர் சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயர் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்கு பெறுபவர்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகம் காளிங்கராயர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து