முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      தமிழகம்
SCHOOL-2026-01-19

சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதன் காரணமாக 3 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறியிருப்பதாவது:  அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உள்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயப்பேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

மயிலாப்பூா் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம்.

மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே.சாலை.கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம். டாக்டா் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும்.

 பெசன்ட் சாலையிலிருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும்.காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆா்.எச். சாலை, அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி டாக்டா்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போா் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை” இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து