முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      உலகம்
Trump

நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை மீண்டும் மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் ‘அமைதி வாரியம்’ எனும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உலக வங்கி தலைவா் அஜய் பங்கா இடம்பெற்றுள்ளாா். அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், அதிபரின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோரும் பிரிட்டன் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் மற்றும் துருக்கி, கத்தாா், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து