முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.ஜ. கூட்டணியில் இணைந்தது த.மாகா மற்றும் புதிய நீதிக் கட்சி

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      தமிழகம்
IJK-GK-2026-01-22

சென்னை, தே.ஜ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டபேரவையில் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும்  என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. (அன்புமணி), அ.ம.மு.க. இணைந்துள்ள நிலையில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனுடன் சந்திப்பு மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் இருவரும் கூட்டணியை உறுதிசெய்த நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது. அதேபோல புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் நேற்று பியூஷ் கோயலைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த கட்சியும் ஏற்கெனவே தே.ஜ.  கூட்டணியில் உள்ளது. இதன்பின்னர் பியூஷ் கோயல், ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

பியூஷ் கோயல் பேசுகையில், "பிகாரில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். காங்கிரஸுக்கு தலைமைத்துவம் இல்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் காலாவதியாகும். சமூகத்தை பிளவுபடுத்தும் தமிழக மக்களை புண்படுத்தும் உதயநிதியின் கருத்துகள் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் மொழியை தமிழ் மக்களை தமிழ் கலாசாரத்தை தி.மு.க.வினர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். தேசிய விரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

என்.டி.ஏ. கூட்டணி அரசு அமைந்தவுடன் தமிழ்நாட்டுக்கு நல்ல ஆட்சியை வளர்ச்சிமிகுந்த ஆட்சியை கொடுப்போம். எங்கள் ஆட்சி அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இருக்கும்" என்றார். ஜி.கே. வாசன் பேசுகையில், "மக்கள் விரோத கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். ஒத்த கருத்துடையவர்கள் அனைவரும் தே.ஜ.  கூட்டணியில் இணைய வேண்டும். தனி சின்னத்தில் தாமாக போட்டியிடும்" என்றார். ஆட்சியில் பங்கு உண்டா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பியூஷ் கோயல், "நாங்கள் ஒரே குடும்பம்போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய குடும்பத்தில் கலந்தாலோசித்து நாங்கள் முடிவெடுத்துக்கொள்வோம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து