முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பன்னீ செல்வத்தின் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் த.வெ.க.வில் இணைந்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      தமிழகம்
KP--Krishnan-2026-01-25

சென்னை, த.வெ.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார். 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தங்கள் கூட்டணிகளை வலுப்படுத்திய நிலையில், புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்யும் நேற்று தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார். 

கூட்டணி இருந்தாலும், இல்லை என்றாலும், தேர்தலை தனியாக நின்று ஜெயிப்போம் என செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, நிர்வாகிகள் கட்சி மாற்றம் மறுபுறம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க., மற்ற மாற்றுக் கட்சிகளை நாடிவருகின்றனர். கட்சி தாவுதலுக்கு பல காரணங்களையும் முன்வைக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது த.வெ.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றினார். ஆலங்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார், பின் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவின் போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது அந்த முகாமில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து