முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உப்பு கரிக்காத கடல்

Image Unavailable

கடல் நீர் என்றாலே உப்பு கரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை நன்றாக அறிவர். கடலின் உப்பு அளவை பிபிடி என குறிப்பிடுகின்றனர். அதாவது ஆயிரம் கிராம் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு இது. தோராயமாக கடலில் சுமார் 1 லிட்டர் நீரில் 7 ஸ்பூன் அளவுக்கு அதாவது 34 பிபிடி முதல் 37 பிபிடி வரை உப்பு இருக்கும். உப்பின் காரணமாகவே கடல் நீர் நன்னீரை காட்டிலும் அடர்த்தியாக உள்ளது. அதே நேரத்தில் உப்புசுவை குறைவாக உள்ள கடலும் உலகில் உள்ளன. அதில் அண்டார்டிகா பகுதியில் உள்ள கடலின் மேல்மட்டத்தில் 34 பிபிடி அளவுக்கு காணப்படும். அதே நேரத்தில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடலில் 30 பிபிடி அளவுக்கே உப்பு கரிக்கும். இதற்கு இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி  கரைந்து கடலில் கலப்பதும், ஏராளமான நன்னீர் நதிகள் மற்றும் மழை நீர் கடலில் கலந்து அதன் உப்பு சுவையை குறையச் செய்கின்றன. ஆனால் முதல் இடம் ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதியில் உள்ள பால்டிக் கடலுக்குத்தான். அதன் உப்பின் அளவு வெறும் 10 பிபிடி அளவுதான். இதற்கு காரணம் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னீர் நதிகள் இங்கு வந்து கலக்கின்றன. அதிக உப்புகரிப்பு சுவை உள்ள கடல் சொல்லவே வேண்டாம் மத்திய தரைக்கடல்தான். அதன் உப்பின் அளவு 38 பிபிடி. இங்கு கடலில் கலக்கும் நன்னீர் மற்றும் மழை நீரின் அளவை காட்டிலும் ஆவியாகும் நீரின் அளவு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்