எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவழகனுடன் சேர்ந்து அருண் விஜய் உடைக்கும் பனிப்பாறை
அறிவழகனுடன் சேர்ந்து அருண் விஜய் உடைக்கும் பனிப்பாறை
வேட்கையும் கனவுகளும் ஒன்று சேரும்போது , சரியான செயல்கள் சிறப்பாக நடக்கும் . உற்சாகமும் லட்சியமும் ஒன்றிணையும்போது மறுமலர்ச்சி உறுதியாக ஏற்படும் .. தல அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் முதற்கொண்டு பல படங்களில் தனது அட்டகாசமான சிறப்பான நடிப்பால் ஒவ்வொருவரையும் பெருவியப்புக்கு ஆளாக்கியவர் அருண் விஜய், தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வு உந்தித்தள்ள ,அவர் துவங்கி இருக்கும் ஐஸ் இன் என்டர்டெய்ன்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அவருடைய திரையுலக வாழ்வின் அழகு மகுடமாக உருவாகிறது .
அவரது கனவும் பலரது எதிர்பார்ப்புமான அவரது முதல் திரைப்படத் தயாரிப்பு வெற்றிகரமாகத் துவங்குகிறது . தான் தயாரித்து நடிக்கும் படத்துக்கு, தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான அறிவழகனை இயக்குனராகப் போட்டுள்ளார் அருண் விஜய். கதைப்போக்கிலும் தொழில் நுட்பத்திலும் தனித் தன்மையோடும் ஒப்புமை இல்லாத வகையிலும் உருவாக இருக்கிறது இந்தப் படம்.
இது பற்றிக் கூறும் அருண் விஜய் "திரைத் துறையையே முழு வாழ்க்கையாகக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்த நான் , அதே துறையில் எனது சிறப்பான பங்களிப்பை தர விரும்புகிறேன். நான் எனது Ice-In Cinemas Entertainment,தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியதும் முழு ஆர்வத்துடன் கதைகள் கேட்டேன் . அவற்றில் அறிவழகன் சொன்ன கதை மிக வித்தியாசமாகவும் தவிர்க்க முடியாத அளவுக்கும் இருந்தது . படத்தை ஆரம்பித்து விட்டோம் " என்கிறார் . வாழ்த்துகள் அருண் விஜய் !
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


