தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாடகி பி.சுசிலாவுக்கு 7 தாய்மொழிகள்: கவிஞர் வைரமுத்து பேச்சு
பாடகி பி.சுசிலாவுக்கு 7 தாய்மொழிகள்: கவிஞர் வைரமுத்து பேச்சு
17595 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
எத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளை தாய் மொழிகளாக கொண்டதை போல் பாடுபவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள். 1953ல் தனது முதல் பாடலை பாடினார், அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னை போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்கவேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது.
அவரது தமிழ் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்திற்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பை கூட பாடியிருக்கிறார், விசும்பலை பாடியிருக்கிறார்.
எனக்கும் மிகவும் பிடித்த "என்னை நினைத்து என்னை அழைத்தாயோ" என்ற பாடல், படத்தோடு பார்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை வரும், அப்படியென்றால் சுசிலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மற்றொன்று "கண்ணுக்கு மை அழகு" பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலை யார் வைத்து பாட வைக்கலாம் என்று கேட்டார். அதற்கு நான், உங்களது இசையில் பாடகி சுசிலா அம்மையார் பாடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்கு பொருத்தமான பாட்டு இதுதான் என்றேன். ஏன் இந்த பாட்டு பொருத்தம் என்று அவர் கேட்டார். தமிழுக்கு சிறப்பான "ழ" எழுத்து இப்பாட்டில் அதிகம் வருகிறது, அந்த "ழ" எழுத்தை உச்சரிப்பதில் பாடகி சுசிலா அம்மையார் அவர்களுக்கு இணை அவர் மட்டுமே என்றேன். தமிழுக்கு சிறப்பு "ழ"கரம், இசைக்கு சிறப்பு பாடகி சுசிலா அம்மையார்.
பாடகி சுசிலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசிலா. பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்து மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசை பங்களிப்பை செய்தவர் சுசிலா அம்மையார்.
இசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்க்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுத்துவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் பயன்படுத்தி இருக்கிறார்.
இவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசிலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்த சமுகத்திற்கு செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிறது என்று சொல்லவேண்டும். சுசிலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.
பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும், உயர்ந்த புகழை பெற வேண்டும், இவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெரிய பெருமை. வாழும் காலத்திலேயே பெருமை எல்லோரையும் தேடி வாராது, அந்த பெருமை பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவரால் இந்தியா பெருமை பெருகிறது. தமிழ் கலை பெருமை பெருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரசிக பெருமக்கள் என் மூலமாக அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.
பாடகி பி.சுசிலா அம்மையார் பேச்சு :-
என் அன்பார்ந்த ரசிகர்களுக்கும், கலைஞர்களுக்கும், பாடகர் பாடகிகளுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சில நாட்களுக்கு முன் சிலோனுக்கு என்னை அழைத்து, எனக்கு கம்பன் விருது கொடுத்து கவுரவித்தனர். அந்நேரத்தில் ஒரு விட்டின் வாசலில் புத்தர் சிலையை கண்டு அதை என் விட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சற்றும் எதிர்பாரவிதத்தில் கவிஞர் வைரமுத்து எனக்கு இன்று புத்தர் சிலையை பரிசளித்தது மிகவும் ஆச்சர்யமாகவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03-02-2023.
03 Feb 2023 -
அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறந்த சீனாவின் உளவு பலூன் : அமெரிக்கா கண்டனம்
03 Feb 2023வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது
03 Feb 2023திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அபுதாபியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் தீ : ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
-
தெலுங்கானாவில் விரைவில் திறக்கப்படவிருந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து
03 Feb 2023ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
நாசாவின் மின்சார விமானம் இந்த ஆண்டு முதல் அறிமுகம்
03 Feb 2023கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
-
உ.பி. ராம்பூரில் திகில் சம்பவம்: இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்..!
03 Feb 2023லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் மனு தாக்கல்
03 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
-
சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
03 Feb 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
-
ஸ்ரீரங்கம் கோவிலில் கோலாகலமாக நடந்த தைத்தேரோட்ட திருவிழா : கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
03 Feb 2023திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
-
ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
03 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
-
பள்ளி சீருடையில் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் : வெறும் 24 நிமிடங்களில் முடிந்தது
03 Feb 2023புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
-
குமரி கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Feb 2023ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு மத்தியப்படை வருகை: தேர்தல் ஆணையர் சாகு தகவல்
03 Feb 2023ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
அதானி விவகாரத்தில் 6-ம் தேதி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
03 Feb 2023அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
சென்னையில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
03 Feb 2023சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
-
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
03 Feb 2023மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
-
தரணி போற்றும் பழனி தைப்பூச திருவிழா
03 Feb 2023அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
-
பிரபல திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
03 Feb 2023சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
-
தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்: சி.டி.ரவி
03 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
-
நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் - இந்தியா விமானம் : அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Feb 2023அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
-
2007 டி20 உலகக் கோப்பை ஹீரோ ஜோகிந்தர் ஓய்வு
03 Feb 2023கடந்த 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1474 கன அடியாக அதிகரிப்பு
03 Feb 2023சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இந்தியா - ஆஸி., டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி
03 Feb 2023நாக்பூர் : இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 நகரங்களிலும்...