எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்குத்து
உள்குத்து
கெனன்யா பிலிம்ஸின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி, தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று வரும் திரைப்படம், 'ஒரு நாள் கூத்து'. மிக எதார்த்தமான கதைகளையும், ரசிகர்களின் மனதை வருடிச் செல்லும் கதைகளையும் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வரும் கெனன்யா பிலிம்ஸின் அடுத்த படைப்பாக உருவெடுத்து இருக்கிறது.
தினேஷ் - நந்திதா நடித்திருக்கும் உள்குத்து. குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தில் இயற்கை அழகோடு படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமான், பாண்டிய படப்புகழ் ஷரத், திலீப் சுப்பாராயன் மற்றும் பிரபல சமையல் வல்லுநர் செப் தாமோதரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவ கிராமத்தின் வாழக்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உள்குத்து திரைப்படத்தில் எளிமையான இசையால் உள்ளங்களை கவரும் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங் துறையில் திறம்பட செயல்பட்டு வரும் KL பிரவீன், நிஜ வாழ்க்கை காட்சிகளை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் ஒளிப்பதிவாளர் பிரமோத் (குக்கூ) ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. அதுமட்டுமின்றி திருடன் போலீஸ் படத்தின் வெற்றி கூட்டணியான தயாரிப்பாளர் ஜெ செல்வ குமார், இயக்குனர் கார்த்திக் ராஜு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இந்த படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்து மீண்டும் இணைவது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் உயர்த்தி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கும் உள்குத்து திரைப்படத்தை தொடர்ந்து, ஜி வி பிரகாஷின் ப்ரூஸ்லீ, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் என தொடர்ந்து வழங்க உள்ளனர் கெனன்யா பிலிம்ஸ்.
உள்குத்து படத்திற்கான தியேட்டர் உரிமைகளை அபி & அபி பிச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அபினேஷ் இளங்கோவன் வாங்கிய பின், உள்குத்து படத்திற்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகமாகிவிட்டது . வர்த்தக ரீதியாகவும், வணிக ரீதியாகவும், உள்குத்து திரைப்படம் வெற்றி பெரும் என்பதற்கு , கெனன்யா பிலிம்ஸ் மற்றும் அபி & அபி பிச்சர்ஸ் கைகோர்த்திருப்பதே சான்று.
"ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து, அவர்களின் ரசனைகளுக்கு ஏற்ற படங்களை வழங்குவது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் உள்குத்து திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லா விதத்திலும் பூர்த்தி செய்யும் படமாக அமையும் என நம்புகிறேன். அதிரடி கலந்த கமர்ஷியல் படமாக உருவெடுத்திருக்கும் உள்குத்து படத்தில் நகைச்சுவைக்கு எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது. குடும்பத்தோடு கண்டுகளிக்கும் அற்புதமான படைப்பாக மட்டுமில்லாமல், சிறந்த வெற்றி படத்திற்கான அனைத்து குணாதியசங்களும் உள்குத்து திரைப்படத்தில் இருக்கிறது. உள்குத்து படத்தின் டீசரை ஜூலை முதல் வாரத்திலும், பாடல்களை ஜூலை மூன்றாவது வாரத்திலும் வெளியிட நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். உள்குத்து படத்தின் வெளியீட்டிற்கு பிறகு எங்கள் நிறுவனத்தின் அந்தஸ்தானது, விநியோகத் துறையில் மேலும் உயரும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அபினேஷ் இளங்கோவன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |