முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இந்த வார ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: Monday, May 20, 2024 to Sunday, May 26, 2024
மேஷம்
aries-mesham

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி --       இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பனை வளம் பெருகும். பிரயாணத்தில் மகிழ்ச்சி நிலவும். தாயார் மூலம் ஆதாயங்கள் பெருகும்.  நல்ல தகவல்கள் வந்து சந்தோஷம் தரும். மேலதிகாரிகள் உங்கள் சிறந்த பணி கண்டு மகிழ்வதோடு பாராட்டும் அளிப்பர்.  சிலர் பக்தி சொற்பொழிவு கேட்டு ஞானத்தன்மை பெறுவர். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். காரியத் தடைகள், சுறுசுறுப்பு இல்லாத நிலையை உருவாகும்.  வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர் அனுசரணை இருக்கும். அரசு வகையில் ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். வீட்டு உபயோகப் பொருட்கள் சம்பந்தமான வியாபாரம் சூடுபிடிக்கும்.

பரணி  --       இந்த வாரம் உறவுகளின் உதவியால் உயர்வு ஏற்படும். புதிய தொழில் விரிவாக்கத் திட்டங்களை செயலாக்க உகந்த வாரமாக அமையும். அதன் காரணமாக ஏற்படும் இலாபத்தால் வருமானம் கூடும். வாக்கு வன்மை காரணமாக, மேடைப் பேச்சு, சாஸ்திர சர்ச்சை போன்றவற்றால் ஏற்படும் வருமானத்தோடு, உங்கள் புகழும் அதிகரிக்கும். எந்த ஒரு போட்டி பந்தயங்களில் நீங்கள்  கலந்து கொண்டாலும் வெற்றி உங்களுக்கே. புத்தகப் பதிப்பு, வெளியீடு ஆகிய தொழில்கள் அமோகமான இலாபத்தோடு இயங்கும். பெண்களால் அனுகூலம் மற்றும் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படுவதோடு, தொழிலில் பண முடக்கங்களும் ஏற்படலாம். 

கார்த்திகை  1 ஆம் பாதம்.—       இந்த வாரம் தொலைதூர சுபச் செய்திகள் கேட்டு மனம் மகிழும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன், கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்வீர்கள். பலரும் வியக்கும் வண்ணம் பல சாதனைகளைப் புரிந்து பாராட்டு பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுடனான  புதிய வியாபார தொடர்புகள் ஏற்பட்டு முன்னேற்றத்துக்கான வழி பிறப்பது, அது சம்பந்தமான பயணங்களும் வெற்றிகரமாக அமைந்து மகிழ்ச்சி தரும்.  தான தருமங்கள் மற்றும் தெய்வ வழிபாடு ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். மனைவியை மனதாரப் பாராட்டி, அமைதியாக இருந்தால் ஆனந்தம் பெருகும்.

ரிஷபம்
taurus-rishibum

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் –       இந்த வாரம் பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வீடு, தொழில் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் ஆதரவு பெற்று எதிர்பார்ப்புக்கு மேலாக விற்பனையால் இலாபத்தை அள்ளுவார்கள். வீட்டில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்புடன் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற நடக்கும். தொழிலில் நவீன உபகரணங்கள் நிறுவுவது போன்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். சிலருக்கு சோம்பல் கூடி, மனோபயம் அதிகரிப்பதால் தங்கள் பணிகளை சரிவர செய்யாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர். பெண்களுக்கு ஏற்படும் அழகிய ஆடை ஆபரண சேர்க்கை காரணமாக அகமகிழ்வார்.

ரோகிணி  –       இந்த வாரம் ஆரம்ப நாளில் தீயோர் சேர்க்கை ஏற்படலாம். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க நேரும். பின்வரும் நாட்களில் பல முகாந்திரங்களிலும் எதிர்பாராத தனவரவு உண்டு.ஞானிகள் மற்றும்  பெரியோர்களின் சந்திப்பு மற்றும் ஆசியால் மன அமைதியும், சந்தோஷமும் பெருகும். மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சினிமா, டிராமா என கேளிக்கைகளில், நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் ஈடுபட்டு மகிழ்வீர்கள். தொழிலாளர்களின் கடமையுணர்வு மிகக் கடினமான பணி ஒத்துழைப்பால் புதிய தயாரிப்புகள் அளவு அதிகரித்து இலாபங்களும் அதிகரிக்கும். சிலருக்கு எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உங்கள் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும்.

மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் –             இந்த வாரம் தந்தைவழி உறவுகளால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம் அல்லது நினைத்த இடத்திற்கு  இடமாற்றம் ஆகியவை ஏற்படலாம். தொழில் ஆர்வம் கூடுவதால் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு மேல் உற்பத்தியை பெருக்கி இலாபத்தையும் பெருக்குவர். அனைத்துக் காரியங்களிலும் பிறரின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை எழலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை ஓரு சில நாட்களுக்குத் தள்ளிப் போடுவது நல்லது. திடீர் தன லாபங்களை எதிர்பார்க்கலாம். சிலர், தூய ஆடைகளை அணிந்து மிடுக்காக, நல்ல காரியங்கள் செய்து நல்லவர் என அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவர்.

மிதுனம்
gemini-mithunum

(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். –       இந்த வாரம் சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலம் வேண்டாத பகையை தேடிக் கொள்வார். அனைத்து விஷயங்களிலும் அரசு மூலம் எதிர்பார்த்த ஆதாயங்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் கடமையுணர்வுடன் கூடிய செயல்பாட்டால் மேலதிகாரிகளின் ஆதரவு மூலம் பதவி உயர்வு பெற முற்படுவீர்கள். அந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேறும்.  மாணவர்களின் கடின உழைப்பின் காரணமாக படிப்பில் ஏற்படும் ஆர்வம் காரணமாக நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியரின் பாராட்டுதல்களை பெறுவர் தொழிலில் உங்கள் அசாத்தியத் திறமைகளை வெளிக்காட்டுவதின் மூலம் ஆதாயங்கள் பல அடைவீர்கள்.  நல்ல சேதிகள் நாடிவரும்.

திருவாதிரை ---             இந்த வாரம்  நீங்கள் மிகவும் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான  தகவல்கள் வந்து சேரும். வாரத்தின், முதல் நாள் பயணத்தில் துன்பமும், பின்னர் வரும் நாட்களில் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி,  அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படலாம். எனவே இன்பம் வரும் போது மகிழ்ச்சியில் பொங்குவதும், துன்பம் வரும் போது துவண்டுவிடாமல் மீண்டும் எழுந்தால்  துன்பமும் இன்பமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். அதன் காரணமாக அதிகம் உழைப்பீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஓங்கும். அறிவுத்திறனும் கூடும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் --      இந்த வாரம் புதிய நண்பர்களின் உதவியால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு  பிரிவும், பகையும் ஏற்படலாம்.  தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் பணியில் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். வியாபார நிமித்தமாக ஏற்படும் வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தந்தையால் நன்மைகள் பல ஏற்படும். மகான்களின் தரிசனம் கிட்டும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கான புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது அரசின் மூலம் அனுகூலம், ஆதாயம் பெறுவீர்கள்.

கன்னி
virgo-kanni

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.       இந்த வாரம் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஏற்றமிகு வாரம். சிலருக்குப் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். எதிர்பாராத தனவரவு மனம் மகிழும்.  போட்டி, பொறாமைகளை அகற்றி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் முன்னேற்றங்கள் சுலபமாகும். சிலர் பழைய கடன்களை அடைத்து புதிய கடன்கள் வாங்க முயல்வீர்கள். உயர் அதிகாரிகளின் உந்துதலால் ஏற்படும். புதிய வியாபாரத் திட்டங்கள்  வெற்றி பெறுவதோடு, நல்ல காலம் கனிந்து வரும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். 

அஸ்தம் –       இந்த வாரம் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம். அதன் காரணமாக வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் கையிருப்பு பணம் அதிகரிக்கும். பங்குச் சந்தை ஈடுபாடு இலாபம் தரும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கத் திட்டங்கள்  தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவும், புதிய தொடர்புகள் நன்மையும் ஏற்படும்.

சித்திரை – 1,2 பாதங்கள் –       இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். கடமை உணர்வோடு செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் மற்றும் பண்பு மிக்கவர்களின் நட்பின் பெருமை சேரும். மற்றவர்களை கவரும் வண்ணம் சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். தன வருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக இருக்கும். கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப்பெரிய சாகசங்களை புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.  

மகரம்
capricorn-magaram

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---       இந்த வாரம் பல வழிகளிலும் தன வருமானம் கூடுதலாக இருக்கும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் உங்கள் அனுசரணையால் சீர்படும்.  சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழிலில் தீட்டப்படும் புதிய திட்டங்கள் அரசின் உதவியோடு சிறப்பாக முடிக்கப்படும். அன்பான உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், அதிகச் செலவுகளும் ஏற்படும். அதன் காரணமாக புதிய கடன்கள் ஏற்படும்.  உங்கள் சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நட்பை பலப்படுத்தும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

திருவோணம்-       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். பக்தி மிக்க புண்ணிய தல யாத்திரைகள் ஏற்படும். வாழ்க்கையில், மேம்படும் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரும் அவர்களின் ஆசைகள் நிறைவேற்றுவதால் மகிழ்ச்சியோடு இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடுதல், செயல் திறனும் கூடி, அதிகாரிகள் பாராட்டைப் பெறுவார்கள். பூமி, வீடு ஆகியவற்றின் மூலம் ஆதாயங்கள்  ஏற்படும்.  பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் –       இந்த வாரம் உங்கள் மூலதனத்தைக் கொண்டு  புதிய முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்த முற்படுவீர்கள். நீண்ட நாட்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நெருங்கிய  உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் உங்கள் திறமைகளை நிலைநாட்டி புகழ் பெறுவது, அதிகாரிகள் பாராட்டையும் பெறுவர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.

கடகம்
cancer-kadagam

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.       இந்த வாரம் திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். மாணவர்களுக்கு வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்குக் கடமையுணர்வுடன் அவர்கள் செய்த சீரிய பணிக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வியாபாரம் மற்றும் தொழில் வாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.    சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.  குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. 

பூசம் --           இந்த வாரம்  மிகச் சிறப்பானதாக அமையும். எதிர்பாராத இனிய விருந்துகள், மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பிறருக்கு உதவுவதற்கும், தரும காரியங்களுக்கும் முழு மனதோடு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். அரசுப் பணியாளர்கள்  அரசாங்கத்திடம் பணி சம்பந்தமாக வைத்த  கோரிக்கைகள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும். நல்லோர் சேர்க்கையால் நல்லதே நடக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் நல்ல  தேர்ச்சி ஏற்படும். சிலருக்கு உழைப்புக் குறைவானாலும்  ஆதாயம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் சிலர் மேன்மை அடைவீர்கள். எப்போதாவது வரும் கோபத்தை அடக்குவது நல்லது.

ஆயில்யம் –       இந்த வாரம் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடக்கும்  அனுகூலமான வாரமாக அமையும்.  வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான சுபச் செலவுகள் ஏற்பட்டு அதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி நிறைந்த நிலை உருவாகும்.  புதுப்புது தொழில் முயற்சிகளில் இலாபம் ஏற்பட்டு செல்வ நிலை உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளரிடம் மிகுந்த நட்பு பாராட்டி உங்கள் வாக்கு வன்மையால் அதிக இலாபம் சம்பாதிப்பது எளிதாகும்.   அழகிய, புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். துணிவுடன்  எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  தூக்கமின்மையால், சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும்.

சிம்மம்
leo-simmam

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் –       இந்த வாரம் உங்களுக்கு அனுகூலங்கள் மிக்க வாரம். மனைவி மற்றும் குழந்தைகளின்  அன்பால்  மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். பெரியோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அதன் காரணமாக உங்கள் பலநாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அதற்குத் தேவைப்படும் அரசு உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் அனைத்தும் கிடைக்க நல்ல வழி பிறக்கும்.  வீட்டுக்குத் தேவை என்று விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புத்தகப் பதிப்பு மற்றும் வெளியீடு சம்பந்தமான தொழில்கள் எதிர்பார்த்தபடி ஆதாயம் அளிக்கும். 

பூரம் –       இந்த வாரம் உங்களுக்கு திடீரென ஏற்படும். பயணங்களால் பணமுடை ஏற்படும்.அரசு பெண் பணியாளர்கள் அவர்கள் எதிர்பார்த்த படி இட மாறுதல்களும், தலைமைப் பதவிகள் தேடி வரும். அன்பால் அனைவரையும் வெல்லலாம். ஆனால் வீண் கோபத்தால் விவேகத்தை இழக்காதீர்கள்.  உங்கள் சிறப்பான, கடமையுணர்வுடன் கூடிய திறமை மிக்க பணி, உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் பெறும்.  வாக்குவன்மையால் மேடைப் பேச்சாளர்கள் ஆற்றும் சிறப்பான, பொருள் பொதிந்த சொற்பொழிவுகள் அனைவரின் பாராட்டையும் பெற்று அதன் காரணமாக அவர்களின் புகழ் ஓங்கி, மதிப்பும், மரியாதையும் கூடும்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். 

உத்திரம்- 1 பாதம் –       இந்த வாரம் உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  புத்திர பாக்கியம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாக  தனவரவு ஏற்படும்.. உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்படும். தெய்வ சிந்தனையாலும், தரும சிந்தனையாலும்  மனதில் அமைதி நிலவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் அரசின் அனுகூலத்தால் பெருகும். உடன் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு மிக்க பணியால் உற்பத்தி பெருகி இலாபமும் பெருகும். பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும்.

துலாம்
libra-thulam

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –       இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். தீவிரமான உழைப்பின் காரணமாக திட்டமிட்டபடி  உங்கள் பணியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதில் அடைவீர்கள். அதன் காரணமாக உங்கள் சீரிய பணி மற்றவர்களின் பாராட்டப் பெறும் என்றால் மிகையாகாது. சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் இடத்தில் அதிகாரம் மிக்க அரசு உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும்.  விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் வாக்கு வன்மையால் இலக்கை எட்டி, நிர்வாகத்தின் வருமானத்தைப் பெருக்கி பாராட்டுதல்களை பெறுவர். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

சுவாதி –       இந்த வாரம் பணிபுரியும் பெண்களுக்குத் உங்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாவதும் அதற்கு காரணமாக அமையும். நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் உங்கள் மனம் மகிழும். உடன்பிறப்புக்களின் உபகார மாற்ற நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும். ஏமாற்றம் அடைவதை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களுடன் சமாதானமாகப் போவது நல்லது. மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். பெண்களால் இலாபம் ஏற்படும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் –       இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்பட்டு அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்களை பெறுவர்.. வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்விற்கான ஆணை தேடி வரலாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த இலக்கை எட்டிவிடுவீர்கள்.

மீனம்
pisces-meenam

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –      இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மனக்களிப்பு கூடும் வாரம். உங்கள் புதிய முயற்சிகள்  அனைத்தும் வெற்றி பெறும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். எல்லோருடனும் பழகும் உங்கள் சகஜமான பழக்கத்தால் விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலையும் ஏற்படும். அதன் காரணமாக சந்தோஷங்கள் நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை உருவாகி வெற்றியும் கிட்டும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் பெருகும். தோஷங்கள் நீங்கி நோய்கள் அகலும். தாய் வழியில் ஆதாயம் உண்டு. மனதில்  நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள்.

உத்திரட்டாதி-       இந்த வாரம் குடும்பத்தில் தனவிருத்தி அதிகமாவதால் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் தீரும். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாளாக இருப்பதில்லையே. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. பல நாள் கனவுகள் நனவாகும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்படா வண்ணம் தேவையற்ற செலவுகளை ஒதுக்குவது நல்லது. தெய்வபலம் இருப்பதால் நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

ரேவதி-       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். கல்வி கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். சுபச் செய்திகள் மனமகிழ்ச்சி தரும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களால் அதிக இலாபம் அடைவர். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பெண்களால் சந்தோஷம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும். உறவுகள், உள்ளங்கவர் நண்பர்கள் மற்றும் மங்கையர்கள் ஆகியோர் உதவிக்கரம் நீட்டுவதால் உள்ளம் மகிழும்.

தனுசு
sagittarius-thanusu

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் –          இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகள் தயவால் அனுகூலமான பலன்கள் அடைவர்.   தொழிலாளர்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. உங்கள் செயல்திறன் அதிகரிகரித்துச் செல்வாக்கும் பெருகும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரமுள்ள உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.

பூராடம் –       இந்த வாரம் நீண்ட கால உழைப்பின் காரணமாக சிலருக்கு கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். விபத்தைத் தவிர்க்க பயணங்களில் எச்சரிக்கை தேவை. தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்.  

உத்திராடம் –1 ஆம் பாதம் –              இந்த வாரம் எதிர்பார்த்தபடி பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் நீங்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.  உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். ஆனால், தொழில் விஷயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய அதிகாரிகள் தயவு தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்
scorpio-viruchagam

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம் –       இந்த வாரம் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும்.  வேலையில் அதிக சிரத்தையும், கடின உழைப்பு எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பை தவிர்க்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

அனுஷம் –       இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும்.  வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  எதிர்பார்த்தபடி தன லாபங்கள் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.  புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும்.  சிலருக்கு உயர் அதிகாரப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது. வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும்.

கேட்டை –       இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.  உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பை தவிர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.

கும்பம்
aquarius-kumbam

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்—       இந்த வாரம்  தாராளமான தனவரவு இருக்கும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன்  நடப்பது பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும்.  வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசுகள் கொடுத்து வியாபாரத்தை மேலும் பெருக்கிக் கொள்வர். நெடுநாளாகப் பிரிந்த தம்பதிகள் இணைந்து மகிழ்வர். பரம எதிரிகள் திட்டங்களை, திறமையாக மற்றும் சமயோஜிதமாக செயல்பட்டு முறியடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும். புத்திரர்களால் ஜெயமுண்டு. நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப் புதுத் தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

சதயம்-       இந்த வாரம் உங்கள் பணவரவு அதிகரிக்கும். செல்வநிலை உயரும்.  புதிய முதலீட்டுத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். நீண்ட நாட்களாக வராத விருந்தினர்கள்  வந்த விருந்தாடி  மகிழ்வைத் தருவர். நெருங்கிய நண்பர்களின் உதவியால் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் சிறப்பாக நடக்கும். சுற்றுலாப் பயணங்கள் இனிமை தரும். சினிமா, டிராமா எனப் பொழுதுபோக்குகளில் குடும்பத்தோடு ஈடுபட்டு மகிழ்வீர்கள். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –       இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து எதிர்பார்த்தபடி பணவரவு ஏற்பட்டு மனம் மகிழும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு காரணமாக எண்ணியபடி பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் கிடைக்கும் அனுகூலமான  வாரம். பணிபுரியும் பெண்கள் தங்கள். அனைத்து முயற்சிகளிலும்  வெற்றி பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். வியாபாரிகள் தங்கள் வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களிடம் வேடிக்கையாகப் பேசி கவர்வது மூலம், இலாபத்தைப் பெருக்குவார்கள். தொழில் புரிவோருக்கு சாதகமான வாரம்.

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்