முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா போட்டியிட தேனி மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் விருப்ப மனு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

சென்னை, பிப்.19-

ஜெயலலிதா போட்டியிட தேனி மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.

கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை அ.தி.மு.க.வினர் கொடுத்த வருகின்றனர்.

நேற்று 14-வது நாளாக விருப்ப மனுவை அ.தி.மு.க.வினர் பொருந்திரளாக வந்து கொடுத்த வண்ணம் இருந்தனர். போடி, ஆண்டிப்பட்டி, கம்பம் ஆகிய தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனுவை தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் கொடுத்தார். அதேபோல் தேனி மாவட்ட இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசாறை செயலாளர் பி.ரவீந்திரநாத் கொடுத்தார். போடி தொகுதியில் தான்  போட்டியிட விருப்ப மனுவை கொடுத்தார்.  ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட தங்க தமிழ்செல்வன் கொடுத்தார். 

முதுகுளத்தூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட நடிகர் செந்தில் விருப்ப மனு கொடுத்தார். திருச்சி  கிழக்கு தொகுதியில் போட்டியிட ஜாக்குலின், மானாமதுரை தொகுதியில் போட்டியிட குணசேகரன் எம்.எல்.ஏ, ஆர்.கே.நகர், துறைமுகம், கொளத்தூர் ஆகிய 3 தொகுதியில் போட்டியிட டாக்டர்.புகழேந்தி, தி.நகர் தொகுதியில் போட்டியிட வி.பி.கலைராஜந், சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட பொன்.தனபாலன், போளூர் தொகுதியில் போட்டியிட சி.என்.கே.தினகரன், கரூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதியில் போட்டியிட சி.பி.அன்புநாதன் ஆகியோர் மனு கொடுத்தனர். விருப்ப மனுவை வாங்கும் நாட்களை வருகிற 23-ந்தேதிவரை நீடித்து உள்ளதாக தெரிவித்துள்ளனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis