முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப் புலிகளுடனான இறுதிபோரில் 8 ஆயிரம் பேர் கொலை

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப். - 27 - தமிழீழ விடுதலை புலிகளுடனான இறுதி போரில் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 2009 ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலை புலிகளுடனான இறுதி போரில் ஈடுபட்டது இலங்கை ராணுவம். நாட்டின் வடக்கு பகுதியில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த படுகொலைகள் விவரிக்க இயலாத சூழ்நிலையில் நடைபெற்றதாகவும், இதே காலகட்டத்தில் 2528 பேர் இயற்கையான முறையில் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஏறக்குறைய 4 ஆயிரத்து 156 பேரை காணவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலைகளில் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் அறிக்கையில் பிரித்து காட்டப்படவில்லை. இலங்கை அரசு வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கைகளை விட மிக குறைவானதாகும். சர்வதேச அமைப்புகள் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளன. 

ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 9 லட்சத்து 97 ஆயிரத்து 754 பேரே வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு 1981 ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் ஆளுகையில் இருந்த முக்கிய நகரங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றில் 7 லட்சத்து 70 ஆயிரம் வசித்து வந்ததாக தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 5 லட்சத்து 67 ஆயிரத்து 229 பேர் வசித்து வந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony