முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் அன்புமணி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      ஊழல்
Image Unavailable

 

சென்னை .மார்ச்.6 -  போதிய வசதியில்லாத மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், 2 மருத்துவர்கள் மற்றும் 2 மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி என்ற மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் போதிய வசதிகள் இல்லாததால் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்க உச்ச nullநீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு உச்சnullநீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த கல்லூரிக்கு அப்போதைய மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் அனுமதி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு இந்த கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கு 30 சதவீத வசதியே இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

மேலும் அங்குள்ள மருத்துவமனையில் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இருந்தனர்.  இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 40 மருத்துவர்கள் அங்கு பணியாற்றியது போல போலி கையெழுத்து போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்கு உச்சnullநீதிமன்றம் அனுமதி மறுத்தது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறையை சேர்ந்த 2 மருத்துவர்கள் அந்த மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்ய உத்திரவிட்டது.  .

அந்த கல்லூரிக்கு அனுமதி கொடுக்கலாம் என்று 2 சுகாதாரத் துறை அதிகாரிகளும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து அந்த கல்லூரியில் மாணவர்களை சேர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைக்கு எதிராக அந்த மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இப்படி அனுமதி வழங்கியதில் லஞ்ச ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக இரண்டு மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடர 3 மாத காலத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் உச்சnullநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இது தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் இதற்கு அனுமதி வழங்கி விட்டது. இதனை தொடர்ந்து 2 மருத்துவர்கள், 2 மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோருடன் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்