Idhayam Matrimony

அணு கதிர்வீச்சு ஜப்பான் முழுவதும் பரவும் அபாயம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச் 29 - ஜப்பானில் உள்ள ஒரு அணு மின்சார நிலையத்தில் இருந்து வெளியாகி கடலில் பரவியுள்ள அணுக்கதிர்வீச்சு அந்நாட்டில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த 11 ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து மிகப்பெரிய சுனாமி அலைகளும் எழுந்தன. இதனால் இது வரை ஜப்பானில் 27,000 பேர் பலியாகியுள்ளனர்.

பூகம்பத்தினால் புகுசிமா என்ற இடத்தில் உள்ள அணு மின்சார நிலையத்தின் 6 அணு உலைகளில் 4 உலைகளில் வெடி விபத்துக்களும் தீ விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக அணு கதிர்வீச்சு கடல் நீரில் பாய்ந்துள்ளது. 

இந்த கதிர்வீச்சு ஜப்பான் நாட்டில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இந்த அணு மின் நிலையத்திற்கு வடக்கே கடலில் பல மைல் தூரம் அணுக்கதிர்கள் பரவியுள்ளன. இது மேலும் பல மைல் தொலைவுக்கு பரவும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கடல் நீரில் இருப்பதை காட்டிலும் 1 கோடி மடங்கிற்கு அணு  உலைகளில் இருந்து குறிப்பாக எண் 2 அணு உலையிலிருந்து கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த  அணு மின்சார நிலையம் டோக்கியோவிற்கு வட கிழக்கே 220 கி.மீ.தொலைவில் இருக்கிறது. 

பூகம்பம் ஏற்பட்ட கடந்த 11 ம் தேதி முதற்கொண்டே இந்த அணு மின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசிந்து கொண்டிருக்கின்றன.

அந்த அணுக் கதிர்வீச்சு அபாயத்தை தடுக்க அமெரிக்கா மற்றும் சர்வதேச அணு சக்தி முகமை ஆகியவற்றின் உதவியை ஜப்பான் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அணுக் கதிர்கள் மக்களை தாக்காமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை  ஜப்பான் மேற்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago