எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.31 - நாட்டில் பெருகிவிட்ட ஊழலை ஒழிக்க என்னுடன் சேர்ந்து போராட வாருங்கள் என்று அண்ணா ஹசாரேவுக்கு சுப்பிரமணியசுவாமி அழைப்பு விடுத்துள்ளார். ஊழை ஒழிக்க அண்ணா ஹசாரே குழுவினர் போராடி வருகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டை அண்ணா குழுவினர் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்து உள்ளார். பிரதமர் மீது அண்ணா குழுவினர் கூறிய குற்றச்சாட்டால் அந்த குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது. குழுவில் உள்ள உறுப்பினர் சந்தோஷ் ஹெக்டே மறுத்துள்ளார்.
இந்தநிலையில் அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஊழலை எதிர்த்து போராடி வரும் அண்ணா ஹசாரேவை சுற்றியுள்ளவர்கள் நக்சலைட்கள். அவர்களின் பிடியில் இருந்து அண்ணா ஹசாரே விலக வேண்டும். ஊழலை எதிர்த்து போராடா என்னுடனும் சுவாமி ராம்தேவுடனும் சேர வேண்டும் என்றார். இந்த நடவடிக்கையை எடுக்க ஹசாரேவுக்கு இதுதான் சரியான தருணமாகும். ஊழலை எதிர்த்து போராட ஊழலுக்கு எதிரான செயல் கமிட்டியில் ஹசாரே இணைய வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றச்சாட்டை ஹசாரே சுமத்தி இருப்பதோடு அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் என்ன குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டு கூறவில்லை. இது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இருக்க வேண்டும். வெறுமனயாக குற்றச்சாட்டு சுமத்துவது ஒரு ஊழல்வாதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என்று சாமி மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


