முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி - 20 கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியதீவு அணி அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

லாடர்ஹில், ஜூலை. - 3 - நியூசிலாந்திற்கு எதிரான 2-வது மற்றும் கடைசி 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டி யில் மே.இ.தீவு அணி 61 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி யது. இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், துவக்க வீரர் கெய்ல் அதிரடி யாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக் கு பக்கபலமாக, சார்லஸ் மற்றும் டி. பிராவோ ஆகியோர் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, சுனில் நரைன் சிறப்பாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக சாமுவேல்ஸ் மற் றும் டி . பிராவோ ஆகியோர் பந்து வீசினர். மே.இ.தீவு மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது 20 -க்கு 20 போட்டி நேற்று இரவு லாடர்ஹில் லில் உள்ள பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மே. இ.தீவு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவ ரில் 5 விக்கெட்டை இழந்து 177 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 1 வீரர் அரை சதமும் , 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக, 39 பந்தி ல் 53 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, சார்லஸ் 32 பந்தில் 36 ரன்னையும், டி. பிராவோ 11 பந்தில் 35 ரன்னையும் , ஸ்மித் 13 ரன்னையும், சிம்மன்ஸ் 18 ரன் னையும், கேப்டன் சம்மி 13 ரன்னையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில்,என். மெக் குல்லம் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரேஸ்வெல், செளதீ மற்றும் நிகோல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். நியூசிலாந்து அணி 178 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனா ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 116 ரன்னை எடுத்தது. இதனால் இந்த 2 -வது போட்டியில் மே.இ.தீவு அணி 61 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  நியூசிலாந்து அணி தரப்பில், பிளைன் 19 பந்தில் 22 ரன் எடுத்தார். தவிர, நிகோல் 19 ரன்னையும், குப்டில் 18 ரன் னையும், கீப்பர் லத்தாம் 19 ரன்னையு ம், என். மெக்குல்லம் 14 ரன்னையும் எடுத்தனர். மே.இ.தீவு அணி சார்பில் இளம் சுழற் பந்து வீச்சாளரான சுனில் நரைன் 12 ரன் னைக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி னார். தவிர, சாமுவேல்ஸ் மற்றும் டி. பிராவோ தலா 2 விக்கெட்டும், பத்ரி 1 விக்கெட்டும் எடுத்தனர், இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago