முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியஅளவிலான பூப்பந்தாட்டப் போட்டி தன்ராஜ் பிள்ளை கொடியேற்றி வைத்தார்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

திண்டுக்கல், ஜூலை.- 5 - திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியினை முன்னாள் இந்திய ஹாக்கி அணி தலைவர் தன்ராஜ் பிள்ளை கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி நேற்று 4ம் தேதி புதன்கிழமை துவங்கியது. துவக்க விழாவில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வர் சக்திவேல் வரவேற்பரையாற்றினார்.  சிறப்பு விருந்தினர் தன்ராஜ் பிள்ளையை கல்லூரி பேராசிரியர் மகேந்திரனும், தேசிய பூப்பந்தாட்ட வீரர் டி.மாரிமுத்துவை பேராசிரியர் வாசுதேவனும் அறிமுகம் செய்து வைத்து பேசினர். தன்ராஜ் பிள்ளை மற்றும் மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் விளையாட்டுப் போட்டியினை பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் ஆர்.எஸ்.கே.ரகுராமன் துவக்கி வைத்தார். 26 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். நேற்று முதல் நாள் ஆட்டம் மின்னொளியில் நடைபெற்றது. போட்டிகள் வரும் 8ம் தேதி நடைபெற்று, இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகத் தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் ஸ்ரீனிவாசன், இணைச் செயலாளர் சுந்தரேசன், கல்லூரி பதிவாளர் சின்னக்காளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago