முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட் போட்டி: இலங்கை ரன் எடுக்க திணறல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

பல்லேகல்லே, ஜூலை.10 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக பல்லே கல்லேவில் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங் கை அணி ரன் எடுக்க திணறி வருகிறது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப் பட்டு உள்ளது. 2 -வது நாள் ஆட்ட நேர முடிவில் இல ங்கை அணி முதல் இன்னிங்சில், 3 விக் கெட் இழப்பிற்கு 44 ரன்னை எடுத்து உள்ளது. அந்த அணி தற்போது 182 ரன் பின்னடைவில் உள்ளது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பல்லேகல்லே சர்வ தேச கிரிக்கெட் அரங்கத்தில் 8-ம் தேதி துவங்கியது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன் னிங்சில், 72.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 226 ரன்னை எடுத்த து. அந்த அணி தரப்பில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித் தனர். 

ஆசாத் சபீக் அதிகபட்சமாக, 158 பந்தி ல் 75 ரன்னை எடுத்தார். இதில் 10 பவு ண்டரி அடக்கம். கேப்டன் மிஸ்பா உல் ஹக் 95 பந்தில் 40 ரன்னை எடுத்தார். தவிர, டெளபீக் உமர் 29 ரன்னையும், மொகமது ஹபீஸ் 22 ரன்னையும், அட்னன் அக்மல் 24 ரன்னை.யும், மொகமது சமி 18 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், பெரீரா 63 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத் தார். ஹெராத் 40 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, குலசேகரா 2 விக்கெட்டையும், மேத்யூஸ் 1 விக்கெ ட்டையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி 2- வது நாள் ஆட்ட நே ர முடிவில், முதல் இன்னிங்சில் 14.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன் னை எடுத்து இருந்தது. 

துவக்க வீரர் சண்டிமால் 8 ரன்னிலும், சங்கக்கரா பூஜ்யத்திலும், கேப்டன் ஜெ யவர்த்தனே 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். துவக்க வீரர் பரணவிதானா 13 ரன்னுடன் களத்தில் இருந்தார். 

பாகிஸ்தான் அணி தரப்பில், ஜூனைத் கான் 15 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். மொகமது சமி 2 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். உமர் குல் மற்றும் அஜ்மல் இருவருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. 

இந்தப் போட்டியின் இடைஇடையே மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்ப ட்டது. எனவே கடந்த போட்டி போல இந்த போட்டியும் டிராவில் முடியுமா என்ற கேள்வி பிறந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago