முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளப் பெருக்கு சீனாவில் 80 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஜூலை. - 31 - சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 80 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சீனத் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதோடு அணைகள் நிரம்பி வழிகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீரால் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை  80 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன ஏராளமானோர் தேடப்பட்டு வருகின்றனர். பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரியல் பூங்காக்களில் விலங்குகளுக்கு ஐஸ் கட்டிகளில் உறைய வைக்கப்பட்ட உணவு பண்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு ஐஸ் கட்டிகளின் தேவை அதிகரித்திருப்பதால் அதன் உற்பத்தியும் 2 மடங்காக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago