முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.போட்டி - பெங்களூர் அணி கேப்டன் யார்?

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

பெங்களூர், ஏப். 3 - இந்தியன் பிரீமியர் லீக் 4 -ம் ஆண்டு போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார் ? என்பது இன்னும் முடிவாக வில்லை. இந்தப் பதவிக்கு கோக்லி மற்றும் வெட்டோரி பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. ஐ.பி.எல். 20 -க்கு 20 கிரிக்கெட் தொடர் வரும் 8 -ம் தேதி துவங்குகிற து. இதில் பங்கேற்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக் கேப்ட ன் பெயர் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 

இத்தகவலை வெளியிட்ட தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பயிற்சியா ளர் ராய் ஜென்னிங்ஸ் இது குறித்து மேலும் கூறியதாவது - பெங்களூர் அணியின் கேப்டன் சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டும். 

டிவில்லியர்ஸ் மற்றும் வெட்டோரி போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு, அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை விட அதிகம் என்று நினைக்கிறேன். 

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரரான விராட் கோக் லி ஒருவர் மட்டுமே பெங்களூர் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

நாட்டின் முன்னிலை இளம் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார் விராட் கோக்லி . 

அவர் இந்திய அணிக்கு தலைமை தாங்கப் போகும் காலம் வெகு தூர த்தில் இல்லை. அவரை பெங்களூர் அணிக் கேப்டனாக்கும் திட்டமும் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை அதிகம் பயன்படுத்த வேண்டு ம் என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனை இடர்பாடை தரு கிறது. 

அதே நேரம் உள்ளூர் திறமைசாலிகளை பயன்படுத்த ராயல் சேலஞ்ச ர்ஸ் அணி நிர்வாகம் விரும்புகிறது. வினய்குமார், ராபின் உத்தப்பா, மற்றும் மனிஷ் பாண்டே போன்றோர் புனே அணிக்கு மாறியது தவறு. 

இங்கு 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றபின் ஏலத்தில் வேறொரு அணிக்கு போவது ஏற்கத்தக்கதல்ல. இவர்கள் போவதால் அணிக்கு எந்த இழப் பும் இல்லை. 

ஆனால் அங்கும் தீவிர பயிற்சி பெற்ற பின் மற்றொரு அணிக்கு தாவ க் கூடாது என்பதே என் அறிவுரை. இவ்வாறு ஜென்னிங்ஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்