முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தை போலி பட்டா போட்டு விற்றதாக பரிதி மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதி ,அவரது உதவியாளர் ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை செய்துவிட்டதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கா ரெட்டி . இவர் நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு புகார் பிரிவில் ஒரு மனு அளித்தார். அதில்,

1985 -ம் ஆண்டு தமிழக அரசு தர்ம தோப்பு அறக்கட்டளை நிர்வாகத்திற்காக 7 ஏக்கர் 46 சென்ட் நிலத்தை வழங்கியது. இந்த நிலம் போலி பட்டா தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கும் தொடர்பு உள்ளது. 2007 -ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி, அவருடைய உதவியாளர் ககாரியன் மற்றும் அன்பரசன், கார்த்திகேயன், ராஜபாண்டி ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து கொண்டனர்.  இந்த நிலத்தை பரிதி இளம்வழுதி அவரது உதவியாளர் ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.  இது குறித்து கடந்த 2011-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 1-ம் தேதி அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவேதான் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை தலையிட்டு முன்னாள் தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

தி.மு.க. பெருளாளர் ஸ்டாலினுடன் மோதலில் உள்ள பரிதி இளம்வழுதி கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில் இந்தப் புகார் கெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்