முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக.8 - உலக தாய்ப்பால் வாரவிழா ஆகஸ்டு 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் குழந்தை  நலத்துறை, இந்தியக் குழந்தை நலக்குழும மதுரை கிளையும் இணைந்து நடத்திய தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.

தாய்ப்பால் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவ ரீதியாக பல நன்மைகளை அளித்து சிசுக்கள் மற்றும் இளம் சிறார்கள் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. எனவே, இந்தப் பேரணியில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் சென்றனர். இப்பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி, அரசு மருத்துவமனையில் முடிவுற்றது.  

இப்பேரணியில் அரசு மருத்துவமனை முதல்வர் என்.மோகன், மருத்துவமனை இயக்குநர் (பொறுப்பு) மாதேவன், கண்காணிப்பாளர் சாமிநாதன், இந்தியக் குழந்தைகள் மருத்துவக் கழக மதுரை கிளையின் தலைவர் எஸ்.வெங்கடேஷ்வரன், செயலர் எஸ்.சம்பத், பொருளாளர் பாலசுப்பிரமணியன், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலத்துறை பேராசிரியர்கள் சித்ராஅய்யப்பன், ஆர்.சங்கரசுப்பிரமணியன், எம்.நாகேந்திரன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர்கள் திருவாய்மொழிபெருமாள், பிரகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்