முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியை தே.பா., சட்டத்தில் கைது செய்ய வழக்கு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.8 -  ''டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்'' என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி சென்னையில் டெசோ மாநாடு நடக்கிறது. டெசோ அமைப்பின் தலைவராக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளார். மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் டெசோ அமைப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி யுள்ளார். மேலும், டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரையில் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago