முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டி: கோக்லி-ரெய்னா அதிரடியால் இந்தியா வெற்றி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பல்லேகல்லே, ஆக. 9 - இலங்கை அணிக்கு எதிராக பல்லேகல் லே நகரில் நடைபெற்ற 20 -க்கு 20 கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் விராட் கோக்லி அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார். அவ ருக்கு ஆதரவாக ரெய்னா, ரகானே மற் றும் கேப்டன் தோனி ஆகியோர் பேட்டிங் செய்தனர். 

பின்பு பெளலிங்கின் போது, அசோக் திண்டா மற்றும் பதான் இருவரும் சிற ப்பாக பந்து வீசி 7 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஆத ரவாக அஸ்வின் மற்றும் உமேஷ் யாத வ் ஆகியோர் பந்து வீசினர். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான ஒரே ஒரு டி - 20போட்டி பல்லேகல்லே சர்வதேச கிரி க்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்ட மாக நேற்று முன் தினம் நடந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தி ய அணி நன்கு பேட்டிங் செய்து ரன் னைக் குவித்தது. இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்னை எடுத் தது. 

இந்திய அணி தரப்பில் விராட்கோக்லி அரை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். அவர் 48 பந்தில் 69 ரன் னை எடுத்தார் . இதில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, ரெய் னா 25 பந்தில் 34 ரன்னையும், ரகானே 21 ரன்னையும், தோனி 16 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், எராங்கா 30 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். மென்டிஸ் 13 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

இலங்கை அணி 156 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந் திய அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 20 -க்கு 20 போட்டியில் இந்திய அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 1- 0 என்ற கணக்கில் வென்றது. 

இலங்கை அணி தரப்பில், ஆல்ரவுண்ட ர் மேத்யூஸ் 29 பந்தில் 31 ரன் எடுத்தார். ஜெயவர்த்தனே 19 பந்தில் 26 ரன்னை எடுத்தார். தவிர, திரிமன்னே 20 ரன்னையும், மென்டிஸ் 11 ரன்னையும் எடுத்த னர்.  

இந்திய அணி சார்பில், இர்பான் பதான் 27 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். அசோக் திண்டா 19 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக இர்பான் பதான் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்