200 மீ ஓட்டப் போட்டி: அமெரிக்க வீராங்கனைக்கு தங்கம்

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 10 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியி ல் அமெரிக்க வீராங்கனை அலீசன் பெ லிக்ஸ் முதலாவதாக வந்து தங்கப் பத க்கத்தை தட்டிச் சென்றார். க்பெலிக்ஸ் கடந்த 2 ஒலிம்பிக்கில் 2 - வ து இடம் பிடித்து வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமல் அவர் செய்த முயற்சிக்கு இந்த ஒலிம்பி க்கில் நல்ல பலன் கிடைத்துள்ளது. 

மகளிருக்கான 200 மீ ஓட்டப் போட்டி யில் அமெரிக்க வீராங்கனை பெலிக்ஸ் பந்தய தூரத்தை 21.88 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். 

ஜமைக்காவின் ஷெல்லி ஆன்பிரேசர் வெள்ளியும், மற்றொரு அமெரிக்க வீரா ங்கனையான ஹர்மிலிட்டா வெண்கல ப் பதக்கமும் வென்றனர்.

ஆடவருக்கான 100 மீ தடை தாண்டும் போட்டியில் அமெரிக்க வீரர் மெரி பந் தய தூரத்தை 12.92 வினாடிகளில் கடந் து தங்கம் வென்றார். சக நாட்டு வீரரா  ன ரிச்சர்ட்சன் வெள்ளியும் (13.04), ஜமைக்காவின் கன்ட்சலே வெண்கலமு ம் (13.12) வென்றனர். 

மகளிருக்கான நீளம் தாண்டும் போட்டியில் அமெரிக்காவின் பிரிட்லீ ரீசி 7.12 மீட்டர் தாண்டி தங்கம் வென் றார். ரஷ்யாவின் எலீனா (7.07) வெள்ளிப் பதக்கமும்,அமெரிக்காவின் ஜேனே வெண்கலமும் வென்றனர். 

மகளிருக்கான 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் ரஷ்யாவின் நடாலியா பந் தய தூரத்தை 52.70 வினாடிகளில் கடந் து தங்கம் வென்றார். அமெரிக்காவின் லசின்டா (52.77) வெள்ளிப் பதக்கமும், செக். குடியரசின் ஹச்னோவா வெண்கலமும் வென்றனர். 

படகு போட்டியில் ஹங்கேரி 2 தங்கம் வென்றது. ஆண்களுக்கான இரட்டைய ர் பிரிவிலும், பெண்களுக்கான குழு பிரிவிலும் அந்நாட்டு வீரர்கள் தங்கம் வென்றனர். 

ஆண்களுக்கான படகு போட்டியின் ஹயாக் ஒற்றையர் பிரிவில் நார்வே வீர ர் முதலாவதாக வந்து தங்கத்தை கைப் பற்றி சாதனை படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: