முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: பொது கணக்கு கமிட்டி முன்பு ரத்தன் டாடா, நீரா ராடியா இன்று ஆஜராகிறார்கள்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி. ஏப்ரல்.- 4 - 2 ஜி ஸ்பெக்ட்ரம்  அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  நடந்துள்ள ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் விவகாரம் தொடர்பாக  அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு  பநரபல தொழில்  அதிபர் ரத்தன் டாடாவும் கம்பெனி தரகர் நீரா ராடியாவும் இன்று ஆஜராகிறார்கள். கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு  2 ஜி ஸ்பெக்கட்ரம் சேவையை அளிப்பதற்காக நடந்த ஒதுக்கீட்டில் மத்திய  அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு முழு பொறுப்பு அப்போது மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த  தி. மு.க. வை சேர்ந்த ஆ.ராசாவே காரணம் என்றும் அக்குழு குற்றம்சாட்டியிருந்தது. 

இதை அடுத்து பாராளுமன்றம் வரை விசுவரூபம் எடுத்த இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசாவை சி.பி.ஐ.அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது மோசடி, ஏமாற்றுதல் , போலி ஆவணம் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ்  சி.பி.ஐ.அதிகாரிகள்  வழக்கு பதிவு  செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசராணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது.

நேற்று முன்தினம் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் ஆ.ராசா மீது 80,000 பக்க குற்றப்பத்ரிகையை சி.பி.ஐ.அதிகாரிகள் தாக்கல்  செய்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி. ஐ. இந்த  விசாரணைகளை நடத்தி கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற  பொது கணக்கு குழு முன்பு  பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவும், கம்பெனி தரகர் நீரா ராடியாவும் ஆஜர் ஆக உள்ளனர்.

அரசில்வாதிகள், கம்பெனி  அதிபர்கள், தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் நீரா ராடியா நடத்திய டெலிபோன் உரையாடல்களுக்கும்  2 ஜி ஸ்பெக்ட்ரம்  ஊழலுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவரது உரையாடல்கள் ஏற்கனவே கசிந்துள்ளன.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே  நீரா ராடியாவிடமும்  தொழில் அதிபர் ரத்தன் டாடாவிடமும் விசாரணை நடத்த பொது கணக்கு குழு முடிவு  செய்ததது. 

இதை அடுத்து இவர்கள் இருவரும் இன்று  அக்குழு மன்பு காலை 11 மணிக்கு ஆஜாராக இருக்கிறார்கள்.

இந்த குழுவின் தலைவரும் பா.ஜ.க.மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி முன்னிலையில் இவர்கள் இருவரும் ஆஜராவார்கள். அவர்களிடம் முரளி மனோகர் ஜோஷி பல்வேறு கேள்விகளை கேட்டு பதில்களை பெறுவார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சர் பதவி நியமனங்களுக்காக இவர்கள் இருவரும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தினார்களா ? என்பது குறித்த கேள்விகளும்  இதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ.ராசாவுக்கு தொலை தொடர்பு துறை இலாகாவை வாங்கித்தர நீரா ராடியாதான்  தனது  செல்வாக்கை பயன்படத்தினார் என்று கூறப்படுகிறது.  அது குறித்த கேள்விகள் நீரா ராடியாவிடம் கேட்கப்படும் என்றும்  எதிர்பார்ர்க்கப்படுகிறது.

நீரா ராடியா காலை 11 மணிக்கும் ரத்தன் டாடா பிற்பகல் 3 மணிக்கும்  இக்குழு முன்பு ஆஜராவார்கள் என்று கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்