ஐ.சி.சி.யின் சிறந்தவீரர் விருது கோக்லி, டெண்டுல்கர் பெயர் பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

துபாய், ஆக. - 14 - ஐ.சி.சி.யின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் கோக்லி மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் பெய ர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் விராட்கோக்லி . எனவே சிறந்த ஒரு நாள் போட்டிக் கான வீரர் விருது பரிசீலனையில் அவரது பெயரும், டெண்டுல்கர் பெய ரும் பரிசீலனையில் உள்ளது. கோக்லியின் பெயர் இந்த ஆண்டிற்கா  ன சிறந்த வீரர் விருது மற்றும் சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் விருது ஆகியற்றில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.  ஐ.சி.சி.யின் மக்கள் தேர்வு விருதுக்கா  ன பட்டியலில் டெண்டுல்கர் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை ஆன்லைன் மூலம் ரசிகர்களே  3-வது முறையாக தேர்வு செய்கின்றனர்  பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுக்கான பட்டிய லில் இலங்கை வீரர் குமார் சங்கக்கரா, தென் ஆப்பிரிக்கா வீரர் வெர்னான் பிளாண்டர், ஜாக்ஸ் காலிஸ், இங்கிலாந் தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.  இதற்கு முன்னதாக சங்கக்கரா (2011) மற்றும் டெண்டுல்கர் (2010) ஆகியோர் ஏற்கனவே இந்த விருதை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.  தவிர, இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி மற்றும் கெளதம் காம்பீர் ஆகியோரது பெயர்களும் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் பட்டி யலில் பரிசீலனையில் உள்ளது.  ஆனால் டெஸ்ட் போட்டிக்கான சிற ந்த வீரர் விருது பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஒருவரது பெயரும் இட ம் பெறாதது வருத்தம் அளிக்கிறது.  பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல், தென் ஆப்பிரிக்கா வீரர் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், சங்கக்கரா, இங்கிலாந்து வீரர் அலிஸ்டார் குக் மற்றும் மே.இ.தீவு வீராங்கனை ஸ்டபானி டெய்லர் ஆகி யோரது பெயர்கள் டெஸ்ட் விருதுக் கான பட்டி யலில் இடம் பெற்றுள்ளது.   இதில் 6 வீரர்கள் பெயர் இந்த ஆண்டிற் கான சிறந்த வீரர் விருது பட்டியலிலு ம், சர் கேரிபீல்டு சோபர்ஸ் கோப்பை க்கான விருது பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
இதில் 5 வீரர்கள் பெயர் இந்த ஆண்டிற் கான சிறந்த வீரர் விருது மற்றும் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விரு து ஆகிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. டெய்லர் வீராங்கனையின் பெயர் மகளிருக்கான இந்தஆண்டிற்கான சிற ந்த வீராங்கனை விருது மற்றும் இந்த ஆண்டிற்கான சிறந்த டி - 20 வீராங்க னை விருது ஆகியவற்றில் பரிசீலனையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: