யு-19 கிரிக்கெட்: இந்தியா இறுதிச் சுற்றுக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டவுன்ஸ்வில்லே, ஆக. 24 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு ம் 19 வயதிற்குட்பட்டோருக்கான இளைஞர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக் கும் இறுதிச் சுற்றில் இந்திய அணி சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்ற ஆஸ்தி ரேலிய அணியுடன் பலப்பரிட்சை நட த்த இருக்கிறது. 

நேற்று நடைபெற்ற பரபரப்பான அரை இறுதியில் இந்திய அணி 9 ரன் வித்தி யாசத்தில் நியூசிலாந்து அணியை தோ ற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந் தது. 

யு - 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. 

இதன் அரை இறுதி ஆட்டம் நேற்று டவுன்ஸ்வில்லே நகரில் நடைபெற்றது. இதில் இந்திய கோல்ட்ஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய இளைஞர் அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவரில் சுமாரான ஸ்கோரை(209) ரன்னை எடுத்தது. 

பின்பு களம் இறங்கிய நியூசிலாந்து அணியை இந்திய அணி 200 ரன்னில் சுருட்டியது. இதில் இந்திய பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

இந்திய அணி தரப்பில் துவக்க வீரர் பிர சாந்த் சோப்ரா சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவருக்குப் பக்கபல மாக அபராஜித் மற்றும் கேப்டன் உன் முக்த் சந்த் ஆகியோர் ஆடினர். 

துவக்க வீரர் சோப்ரா 104 பந்தில் 52 ரன் னை எடுத்தார். அபராஜித் 44 ரன் எடுத் தார். கேப்டன் சந்த் 44 பந்தில் 31 ரன் னை எடுத்தார். 

நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் கடைசி வரை போராடியது. முக்கியமாக அந்த அணியின் பந்து வீச்சு மிக நேர்த்தியாக இருந்தது. 

நியூசிலாந்து அணியின் இடது கை ஸ்பி ன்னரான பென் ஹார்னே 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, வேகப் பந்து வீச்சாளர் மேத்யூ குவின் 2 விக்கெட் எடுத்தார். 

முன்னதாக துவக்க வீரர் பிரசாந்தும், கேப்டன் சந்தும் இணைந்து முதல் விக் கெட்டிற்கு 51 ரன் சேர்த்து அணிக்கு நல் ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீரர்கள் நிலைத்து ஆடத் தவறியதால் இந்திய அணியின் ஸ்கோர் சுமாராக இருந்தது.  

பின்பு கேப்டன் சந்த் 31 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் மித வேகப் பந்து வீச்சாளர் கானர் நெய்யென்ஸ் வீசிய பந்தில் வெளியேறினார். 

கேப்டன் சந்த் 5 பவுண்டரிகள் விளாசி னார். பின்பு களம் இறங்கிய அபராஜித் முதலில் கவனமாக ஆடினார்.  பின்பு அவர் எளிதாக ஆடி ரன்னை எடுத்தார். 

அபராஜித்தும், பிரசாந்தும் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 81 ரன் சேர்த்தனர். பின்பு சோப்ரா ஆட்டம் இழந்தார். அவரை நியூசி. கேப்டன் வில்யங் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். 

பிரசாந்த் 6 பவுண்டரிகளையும், 1 சிக்ச ரையும் அடித்தார். அபராஜித் சிறிது நேரத்தில் ஆட்டம் இழந்தார். 61 பந்து களைச் சந்தித்த அவர் இசி சோதியின் சுழற் பந்தில் அவுட்டானார். 

அதன் பிறகு களம் இறங்கிய இந்திய வீரர்கள் யாரும் தாக்குப் பிடிக்கவில் லை. இதனால் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இந்திய இளைஞர் அணியில் மூத்த வீர ரான சந்தீப் சர்மா 36 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார். ரவிகாந்த் சிங் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கமல் பஸ்சி 1 விக்கெ ட் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: