பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கு டிராவிட் , காம்பீர் பெயரை சிபாரிசு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. - 28 - மதிப்புமிக்க பத்மபூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் கெளதம் காம் பீர் ஆகியோரது பெயர்களை சிபாரிசு செய்ய இந்திய கிரிக்கெட்கட்டுப் பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்து ள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து பி.சி.சி.ஐ. தலைவரான என். ஸ்ரீநிவாசன் மற்றும் செயலாளர் சஞ்சய் ஜக்டேல் ஆகியோர் விவாதித்து விட்டு பின்னர் மத்திய அர சுக்கு சிபாரிசு செய்ய உள்ளனர் என்று பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித் தார். ஏற்கனவே டிராவிட் மற்றும் காம்பீர் ஆகியோரது பெயர்களை உறுப்பினர் கள் விவாதித்து விட்டனர். கடைசியாக தலைவர் மற்றும் செயலாளர் ஆகி யோர் விவாதிக்க உள்ளனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய கடைசி தே தி கடந்த 15 ம் தேதியாகும். அவர்கள து பெயர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன என்றும் பி.சி.சி.ஐ. அதிகாரி தெரிவி த்தார். முன்னதாக டிராவிட் பெயர் ராஜீவ் கா ந்தி கேல் ரத்னா விருதிற்கு சிபாரிசு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தேர்வின் போது உறுப்பினரும், முன்னாள் கேப்டனுமான ரவி சா ஸ்திரி கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கேட்ட போது, தனக்கு அழை ப்பு வராததால் கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்றார் சாஸ்திரி.  கர்நாடக வீரரான டிராவிட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 24.000 ரன்களுக்கு மேல் குவித்து இருக் கிறார். 134 டெஸ்டில் ஆடியுள்ள அவர் மொத்தம் 13,000 ரன்களுக்கு மேல் எடு த்து இருக்கிறார். தவிர, 344 ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற அவர் 11,000 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார். 

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 36 சதத்தையும், ஒரு நாள் போட்டிகளில் 12 சதத்தையும் எடு த்து முத்திரை பதித்து இருக்கிறார்.  டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி - 20 என அனைத்து பிரிவிலும் சிறப்பாக ஆடிக் கூடிய டிராவிட் பத்மபூஷன் விருதிற்கு மிகப் பொறுத்தமானவர் ஆவார். 

கடந்த வருடம் நடந்த உலகக் கோப் பை இறுதிச் சுற்றுப் போட்டியில் அவர் 97 ரன் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரது பெயர் அர்ஜூனா விருதிற்கு சிபாரிசு செய்யப்பட்டது.  பாரத் ரத்னா மற்றும் பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை அடுத்து இந்திய குடிமகனுக்கு அளிக்கப்படும் 3 - வது மதிப்பு மிக்க விருது பத்மபூஷன் விரு தாகும். 

இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பொறு த்தவரை சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே பத்மவிபூஷன் விருதினைப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  தவிர, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வினுமன்காட், லாலா அமர்நாத் உட்பட 9 கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மபூஷ ன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

---------------------

இதை ஷேர் செய்திடுங்கள்: