எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புட்டப்பர்த்தி,ஏப்.- 7 - பகவான் சத்ய சாயி பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. நேற்றுமுன்தினம் இருந்தது மாதிரியே நேற்றும் சாயி பாபாவின் உடல்நிலை இருந்தது. ஆனால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனளித்து வருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் தெய்வமாக வணங்கும் சத்ய சாயி பாபாவுக்கு கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி திடீரென்று உடல்நிலை பாதித்தது. அவருக்கு நெஞ்சு இறுக்கமும், சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது. நுரையீரலிலும் பாதித்தது. மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனையொட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருந்தும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியது. இருந்தபோதிலும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சையின் பலன் திருப்திகரமாக இருக்கிறது என்று டாக்டர்கள் கூறினாலும் அவரது உடல்நிலை நேற்றுமுன்தினம் கவலைக்கிடமாக இருந்தது மாதிரியே நேற்றும் இருந்தது என்று சத்ய சாயி பாபா மருத்துவமனை இயக்குனர் ஏ.என்.சப்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இருதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவைகள் சரியாக இருக்கின்றது. இன்னும் செயற்கை சுவாச கருவி மூலம்தான் சுவாசித்து வருகிறார். டையாலிஸ் குறைக்கப்பட்டுள்ளது. அவரது உணர்வில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


