முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல மலையாள நடிகர் திலகன் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம். செப்.- 25 - பிரபல மலையாள நடிகர் திலகன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மலையாளம் , தமிழ் உள்பட சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திலகன் . இவர் மலையாள மொழி படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். என்றாலும் சில தமிழ் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் இவருக்கு இரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவருக்கு நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 3.35 மணிக்கு அவர் மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். 1979 ல் உள் காதல் என்ற படத்தில் அறிமுகம் ஆன திலகன் அதற்கு முன்உப கேரள மலையாள கலை மையம் உள்ளிட்ட பல்வேறு நாடக கம்பெனிகளிலும் நடித்து வந்தார்.
ஏராளமான தேசிய மற்றும் மாநில திரைப்பட விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். கடந்த 2009 ம் ஆண்டுதான் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த நடிகர் திலகனின் உடலுக்கு மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகர் நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். இவரது மரணம் ஒரு பேரிழப்பு என்றும் மலையாள திரையுலகில் இவரால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும் இதை நிரப்ப முடாயாது என்றும் கேரள திரையுலக பிரமுகர்கள் கூறியுள்ளனர்.
திலகனின் மறைவுக்கு இடது கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis