எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது தில்லி, நவ.- 1:- சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள்,வாடிக்கையாளர் விவரம் (கேஒய்சி) அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஒரே பெயரில் அல்லது ஒரே முகவரியில் பெறப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கேஸ் இணைப்புகளைக் கண்டறிந்து அதை ரத்து செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டன. இதன்படி, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வாடிக்கையாளரிடமிருந்து பூர்த்தி செய்த கேஒய்சி படிவத்தை பெற்று, அதைச் சரிபார்த்து சமர்ப்பிக்குமாறு விநியோகஸ்தர்களுக்கு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் தங்களிடம் கூடுதலாக உள்ள இணைப்பை விநியோகஸ்தரிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கத் தவறினால், ஆய்வின்போது ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருப்பது தெரியவந்தால், கூடுதல் இணைப்புகள் ரத்து செய்யப்படும். இந்நிலையில், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


