முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாவீரர் பிறந்தநாள் முதல்வர் கருணாநிதி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - மகாவீரர் பிறந்தநாளையொட்டி, முதல்வர் கருணாநிதி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்தி செய்தியில் கூறியிருப்பதாவது:- வர்த்தமான மகாவீரர் பிறந்த திருநாள் ஏப்ரல் 16 அன்று  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய பீகார் மாநிலத்தில் பாட்னா நகருக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.599 ஆம் ஆண்டில் பிறந்த வர்த்தமானர், தமது செல்வத்தை எல்லாம் மக்கள் பலருக்கும் தானமாக வழங்கித் துறவு nullண்டு விருப்பு வெறுப்புகளை வென்றவர் என்பதால், மகாவீரர் என வரலாற்றில் போற்றப்படுகிறார்.

இவர், கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களை மக்களுக்கு வலியுறுத்தி, ஜைன சமயக் கோட்பாடுகளைப் பரப்பியவர்; மக்களிடம் கேள்விகளைக் கேட்டு, அவர்கள் தரும் விடைகளின் மூலமே தமது சிந்தனைகளை மக்களுக்கு வலியுறுத்தியவர்.  ஒருவர் கூறினார் என்பதற்காகக் கடும் வெப்பத்தால் கனிந்து சிவந்த இரும்புக் கம்பியைக் கையில் பிடிப்பீர்களா?  அது உங்களால் முடியாதல்லவா? அப்படியானால் மற்றவரை நீnullங்கள் அதுபோல் செய்யச் சொல்வது முறையாகுமா? துன்பம் என உங்களால் தவிர்க்கப்பட்டதை மற்றவரிடம் நீnullங்கள் வலியுறுத்துவது சரியாகுமா? ​ எனக் கேட்டு, அதன்மூலம் பிற உயிர்க்கு இன்னா செய்தல் ஆகாது என்னும் அறத்தை வலியுறுத்திய மாமனிதர் மகாவீரர். அவர் பிறந்த திருநாளில் அவர் அறிவுறுத்திச் சென்ற சிந்தனைகளை மனதில் பதித்து  அனைவரிடமும் அன்பு செலுத்தி மனிதநேயம் வளர்ப்போமாக!

மகாவீரர் பிறந்த திருநாளைக்  கொண்டாடி மகிழும் ஜைன சமயம் சார்ந்த சகோதர, சகோதரிகள் அனைவர்க்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

இவ்வாறு முதல்வர் தனது  வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis