முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை குஷ்புவுக்கு எதிராக நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

நாகர்கோவில், டிச.- 13 - நடிகை குஷ்பு சமீபத்தில் இந்து கடவுள்களின் உருவம் பொறித்த சேலை அணிந்து ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்கு தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  நடிகை குஷ்பு இந்துக் கடவுள்களை அவமதித்து விட்டதாகவும், அதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினர்.  மேலும் குஷ்புவுக்கு எதிராக போராட்டங்களில் ்டுபடப்போவதாகவும் அறிவித்தனர். அதன்படி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இந்து முன்னணி சார்பில் நடிகை குஷ்புவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதற்கு நகரத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் நம்பி ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், மகாராஜன், ரவிச்சந்திரன், மணி, மோகன், துணைச் தலைவர்கள் வினு, தினமணி மற்றும் பாரதீய ஜனதா முன்னாள் நகரத் தலைவர் ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் குஷ்புவின் உருவப்படம்  பொறித்த டிஜிட்டல் போர்டை அடித்து, சாணத்தை கரைத்து ஊற்றி அவமரியாதை செய்து கோஷமிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago