முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம்: சட்டம் ஒரு இருட்டறை

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை,டிச.28 - ஒரு பெண்ணை கொலை செய்து  சாட்சிகள் இல்லாமல் சட்டத்தை பயன்படுத்தி தப்பியவர்களை, கொலை செய்து அதே சட்டத்தைப் பயன்படுத்தி தப்பிக்கும் ஒரு இளைஞரின் கதை. நாயகன் தமன் தன் உயிருக்கு உயிராக காதலிக்கும் பியாவை ஒரு கும்பல் கொலை செய்கிறது. பின்பு சரியான சாட்சிகள் இல்லாததால் அந்த கும்பல் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள். இவர்களை சாட்சியங்கள் இல்லாமல் தமன் கொலை செய்கிறார். இவரை கொலைக்கான  ஆதாரத்துடன் பிடிக்க தமனின் அக்கா ரீமாசென் (போலீஸ் அதிகாரி) துடிக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அக்காவிற்கு டிமிக்கு கொடுத்து தப்பிக்கிறார். இறுதியில் அக்கா-தம்பி இவர்களில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ் நாயகன் தமன் காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளிலும் ரீமாசென்னிடம் எதிர்த்து வசனம் பேசும் காட்சிகளில் நிமிர்ந்து நிற்கிறார். பியா தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். இவர் இறந்த பிறகு இரண்டாவது நாயகியாக வரும் பிந்து மாதவி அழகு, அடிக்கடி சிரிக்கும் போது கண்ணத்தில் விழும் கண்ணக்குழியில் நம்மை சிக்கவைக்கிறார். கூடவே தன்னுடைய பார்த்திரத்தை நேர்த்தியாக செய்துருக்கிறார். இன்னும் பிந்துவை நடிப்புக்காக பயன்படுத்தியிருக்கலாம். தமனின் காதலியாக வரும் வெளிநாட்டு பெண் படம் முழுக்க வந்து அரைடவுசர் அணிந்து கவர்ச்சி ஏரியாவை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரீமாசென் கம்பீரம் இல்லாமல் போலி அதிகாரி போல வந்துப் போகிறார்.

இறுதி காட்சியில் ``சட்டம் ஒரு இருட்டறைன்னு அண்ணா சொன்னார். நான் சொல்கிறேன் சரியான சாட்சிகள் இல்லையென்றால் நீதிக்கும் தன்னை கிடைக்கும் என்று படத்தின் தலைப்புக்கு விளக்கம் சொல்லி பஞ்டயலாக் பேசுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர் இதை ரசிகர்கள் ஏற்று கொண்டால் சரி. சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவினால் காட்சிகள் பிரமாண்டம், விஜய் ஆண்டனியின் பின்னணி இசை, பாடல்கள் படத்துக்கு பலம். தயாரிப்பு எஸ்தல் எண்டர் டெய்மெண்ட் இயக்கம் சினேகாபிரிட்டோ இளைஞர்கள் கண்டு கழிக்கும் படம் சட்டம் ஒரு இருட்டறை இளம் வயது ஒரு பெண் இயக்குனர் படத்தை இயக்கியிருப்பது பாராட்டுக்குறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்