எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகரி,ஏப்.17 - சாய்பாபா 2 வாரத்தில் ஆசிரமம் திரும்புகிறார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவு ஒன்று அமைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருபவர் சத்யசாய்பாபா. இவர் கடந்த மாதம் 18 ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக புட்டப்பர்த்தியில் உள்ள சத்யசாயி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சுத் திணறல் இருப்பதால் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
மருந்துகளை உடல் உறுப்புக்கள் ஏற்றுக் கொள்வதால் ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. இது குறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சபையா கூறும் போது, சாய்பாபாவின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவரது சுவாசக் கோளாறை போக்குவதற்காக நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோளாறு குணமானால் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றி விடலாம்.
இந்த நிலையில் சத்யசாயி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும் போது, சாய்பாபாவை 2 வாரத்துக்குள் ஆசிரமத்துக்கு கொண்டு வருவோம். அவருக்கு அங்கேயே அவசர சிகிச்சை பிரிவு ஒன்று அமைக்கப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்பத்திரியில் சாய்பாபா இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மற்ற நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பாபாவை ஆசிரமத்துக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
சாய்பாபா விரைவில் நலம் பெற வேண்டி புட்டப்பர்த்தி ஆசிரமத்தில் தொடர் பஜனைகள் நடந்து வருகின்றன. ஆந்திரா முழுவதிலும் சிறப்பு யாகங்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


