முக்கிய செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க முடியாததால் தற்கொலை - ஜெயலலிதா இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Leaf 2

 

சென்னை, ஏப்.18 - இரட்டை இலைக்கு வாக்களிக்க முடியாததால் கோவையில் ரூபினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

கோவை மாவட்டம், அவினாசிலிங்கம் அஞ்சல், ஹோசிமின் நகரைச் சேர்ந்த ரூபினி என்பவர் தன் கணவருடன் இணைந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று காத்திருந்த சூழ்நிலையில், தன் கணவர் காலதாமதாக வந்ததன் காரணமாக இரட்டை இலைக்கு வாக்களிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன். இந்த அளவிற்கு கழகத்தின் மீது பற்றும், விசுவாசமும் கொண்ட அன்புச் சகோதரி ரூபினியின் இழப்பு என்னை மிகுந்த மன சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற காரணங்களுக்காக விலை மதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கழக உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ரூபினியை இழந்து வாடும் அவரது கணவர் பி.பாபு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: