முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம்-புதுச்சேரியில் மீன் விலை கிடுகிடு உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.18 - மீனவர்கள் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன் விலை கிடு கிடுவென்று உயர்ந்துள்ளது.மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் மீனவர்கள் விசைப் படகுகள் கொண்டு மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டு இந்த தடை கடந்த 15 ம் தேதி துவங்கியது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இந்த காலத்தில் கட்டுமரம், பைபர் படகுகளில் மீன்பிடிப்பவர்கள் 30 கிலோ மீட்டருக்குள் மீன் பிடிக்கலாம். ஆனால் இந்த கடல் பகுதியில் குறைந்த அளவு மீன்களே கிடைக்கும் என்பதால் மீன் வரத்து குறைந்தது. இதனால் மீன்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. உள்நாட்டு மீன் தேவையை பூர்த்தி செய்ய கேரளம், மகாராஷ்ட்ரம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருந்தாலும் மீன் விலை உயர்வை தடுக்க முடியவில்லை. மீன் விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மீனவர் சங்க தலைவர் தயாளன், மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலங்களில் மீனவர்களின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு ஒன்றுக்கு அரசு மானியமாக ரூ.800 வழங்குகிறது. இதனை உயர்த்த வேண்டும். கரை ஓரத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதால் படகுகளின் அடிப்பகுதி அதிகம் சேதமடைகிறது. எனவே படகுகளை பராமரிக்க ஒரு தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்றார். 

விசைப்படகு   உரிமையாளர்கள் ராஜு தெரிவிக்கும்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மீனவர்கள் இக்காலத்தில் மீன் பிடிக்க எந்த தடையும் இல்லை. இதனால் அவர்கள் தாராளமாக இந்த காலத்தில் இப்பகுதியில் வந்து மீன்களை பிடித்துச் செல்கின்றனர். இதனால் மீன்களின் இனவிருத்தி பாதிக்கப்படும். எனவே  கடலோர காவல் படை இக்காலத்தில் ரோந்துப் பணிகளை கடுமையாக்கி இலங்கை மீனவர்கள் நம் பகுதியில் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis