இந்தியா மோசமான ஆட்டம்: டோனி பாய்ச்சல்

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜன.5 - பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவி தொடரை இழந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தது. 251 ரன் என்பது எளிதான இலக்கு தான். இதை இந்திய அணி எளிதில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை போட்டியைப் போலவே  இந்திய பேட்ஸ்மேன்கள் நேற்றைய முன்தினம் ஆட்டத்திலும் சொதப்பினர். கேப்டன் டோனி மட்டுமே நிதானமாக நின்று விளையாடி 54 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்திய அணி 48 ஒவரில் 165 ரன்கள் எடுத்து 85 ரன்களில் மோசமான தோல்வியை தழுவியது. ஜூனைத்கான், அஜ்மல் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். எற்கெனவே சென்னையில் நடந்த முதல் ஆட்டத்திலும் தோற்று இருந்ததால் இந்த தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது.

இதுகுறித்து கேப்டன் டோனி கூறுகையில், பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக வீசி பாகிஸ்தானை 250 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டனர். ஆனால் பேட்ஸ்மேன் தான் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர்களால் தங்களது ஆட்டத்தை நிஐ நிறுத்திக்கொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. சீனியர் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தாமல் ஆடியது ஏமாற்றமளிக்கிறது. பாகிஸ்தான் அணயின் சிறப்பான பந்து வீச்சு இந்திய வீரர்கள் திணறுவதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஜாம்ஷெட் 106 ரன்னும் மற்றொரு தொடக்க வீரர் ஹபீஸ் 76 ரன்னும் எடுத்தனர். இந்தியாவின் இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கூறுகையில், வெற்றிக்கு காரணமாக விளங்கிய தொடக்க ஆட்டக்காரர்களை பாராட்டுகிறேன். சென்னை, கொல்கத்தா ஆடுகளங்கள்  பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்களை விட எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர் என்றார். 

மேலும் இந்தியா- பாகிஸ்தான் மோதும் கடைசி போட்டி நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: