முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக் ஹஸ்சேவிற்கு வழியனுப்பு விழா நடத்த ஆஸி., முடிவு

சனிக்கிழமை, 5 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 6 - டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற  இருக்கும் மைக் ஹஸ்சேவிற்கு உற் சாக வழியனுப்பு விழா நடத்த ஆஸ்தி ரேலிய அணி முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், அணி நிர் வாகம் மற்றும் இதர வீரர்கள் ஆலோச னை நடத்தி வருகிறார்கள். 

கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையி லான இலங்கை அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமயிலானந அணிக்கு எதிராக விலையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வரு கிறது. ஏற்கனவே 2 டெஸ்டுகள் முடிந் து விட்டன. 

ஏற்கனவே முடிவடைந்த 2 டெஸ்டிலு ம் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற் றி விட்டது. இது இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்நிலையில் இலங்கை மற்றும் ஆஸ் திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று துவங்க இருக்கிறது. 

இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்டு டன் ஓய்வு பெறுவதாக மூத்த வீரரான மைக் ஹஸ்சே அறிவித்து இருக்கிறார். 

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரி ல் கலக்கி வந்த அனுபவம் வாய்ந்த அவரை சிறப்பான முறையில் வழிய னுப்ப அந்த அணி திட்டமிட்டு உள்ளது. 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கே ப்டனான ரிக்கி பாண்டிங் 17 வருடமா க ஆடிய பிறகு, தெ.ஆ. வுக்கு எதிரான தொடருக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரு டன் மற்றொரு மூத்த வீரரான ஹஸ்சே ஓய்வு பெறுகிறார். இரண்டு மாத இடைவெளியில் 2 மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவது கேப்டன் கிளார்க்கிற்கு சிர மத்தை ஏற்படுத்தும். 

மெல்போர்னில் நடைபெற்ற 2- வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங் ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி கடை சி டெஸ்டிலும் வெற்றி பெற்று இலங் கை அணியை ஒயிட் வாஷ் ஆக்க திட்டமிட்டு உள்ளது. 

கேப்டன் கிளார்க் காயம் அடைந்து இருந்தார். எனவே இந்த டெஸ்டிற்கு அவர் தகுதி பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அவர் குணமடைந்து விட்டார். 3 -வது டெஸ்டில் பங் கேற்பது உறுதியாகிவிட்டது. 

காயம் அடைந்த துவக்க வீரர்  ஷேன் வாட்சனுக்குப் பதிலாக 4-வது வீரராக கிளார்க் களம் இறங்குகிறார். 

உஸ்மான் கவாஜாவிற்குப் பதிலாக ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ் வெல் 12-வது வீரராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். தவிர, காயம் அடைந்த வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago