முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரன் சின்னமலை பிறந்த நாள் - அ.தி.மு.க. சார்பில் மாலை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.18 - மாவீரன் தீரன் சின்னமலை  255-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க மாவீரன் தீரன் சின்னமலை 255-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை (17.4.2011  ஞாயிற்றுக் கிழமை), சென்னை, கிண்டியில்

அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு, கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், கழக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர்கள் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத்,

கழக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் பா.வளர்மதி, கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் நா.பாலகங்கா எம்.பி., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம், கழக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி., கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி., கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ்.சேதுராமன், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.பி., கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜி.செந்தமிழன் எம்.எல்.ஏ., கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் சைதை சா.துரைசாமி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதே போல் அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.பி., ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் பி.தங்கமணி எம்.எல்.ஏ., திருப்nullர் மாவட்டக் கழகச் செயலாளர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர்

மாவட்டக் கழக அவைத் தலைவர் பி.சி.ராமசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர்.என்.கிட்டுச்சாமி ஆகியோரும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!