எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.11 - விஸ்வரூபம் திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:- விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளுக்கு வருவதில் கடந்த சில வாரங்களாக சிக்கல்கள் இருந்து வந்தன. இந்த சிக்கல் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆகியோருடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் முன்பு திட்டமிட்டிருந்தபடி விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போது இந்த பிரச்சினைகள் முடிந்து விட்டதால் விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்கள், மற்றும் வினியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இம்மாதம் ஜனவரி 25-ம் தேதி 500 திரையரங்குகளுக்கு குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.
என் தொலைநோக்கை புரிந்து கொண்டு டி.டி.எச். எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்க தயாரான திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


