முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்: ரசிகர்களுக்கு மோடி வாழ்த்து

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 18 - முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 96 வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 96 வது பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 96 வது பிறந்தநாள் இன்று(நேற்று) கொண்டாடப்படுகிறது. அவரது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் உள்ள டானிங்டன் சந்திப்பில் 7.5 அடி உயரத்தில் 500 கிலோ எடை கொண்ட வெண்கலச் சிலையை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழாவையொட்டி டானிங்டன் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கே வந்த ஜெயலலிதாவுக்கு படுகர், தோடர், கோத்தர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் பொது மக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று அவரை வரவேற்றனர். சிலையை திறந்து வைத்த அவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago