எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஜன.27 - இந்த ஆண்டு மொத்தம் 108 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரத ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 24 பேருக்கு பத்மபூஷன் விருதும், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் உள்பட 80 பேர் பத்மஸ்ரீ விருதுபெறுகிறார்கள்.
குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. மிகவும் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது 2008-ம் ஆண்டு பீம்சென் ஜோஷிக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், குஜ்ரால் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந்த ஆண்டு மொத்தம் 108 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 24 பேர் பெண்கள். இறந்த பிறகு விருது பெறுபவர்கள் என 11 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பத்மவிபூஷன்:
பாரத ரத்னா விருதுக்கு அடுத்த படியாக பத்ம விபூஷன் விருதுதான் பெரிய விருதாகும். ஒடிஸாவைச் சேர்ந்த பிரபல கலைஞர் ரகுநாத்
மொகா பாத்ரா, டெல்லியைச் சேர்ந்த கலைஞர் ஹைதர்ரஜா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் யஷ்பால், கர்நாடகாவைச் சேர்ந்த அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் ரோதம் நரசிம்மா ஆகியோர் பத்ம விபூஷன் விருது பெறுகிறார்கள்.
பத்மபூஷன்:
ராமநாயுடு, பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி,கனக்ரிலே,பிரபல நடிகை ஷர்மிளா தாகூர், சரோஜா வைத்தியநாதன், அப்துல் ரஷித்தான், மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா, மறைந்த கலைஞர் ஜஸ்பால் சிங்பட்டி, சிவாஜிராவ் கிரிதர் பட்டீல், டாக்டர் அபது கதா, சிவதாணுப்பிள்ளை, டாக்டர் விஜயகுமார் சரஸ்வத், டாக்டர் அசோக்சென், என்,சுரேஷ், பேராசிரியர் சத்யா அத்லுரி, கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேராசிரியர் ஜோகேஷ் சந்திரபட்டி உள்ளிட்ட 24 பேருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது.
பத்மஸ்ரீ:
ஜெய்ஸ்ரீ, ரமேஷ்சிப்பி,ரீட்டு குமார், டாக்டர் பிரமோத்குமார் ஜூ ல்கா, கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ராஜஸ்ரீபதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் மயிலானந்தன், டாக்டர் சுதர்சன் அகர்வால்,சென்னையைச் சேர்ந்த டாக்டர் தேவராஜன், பிரபல நடிகை ஸ்ரீதேவி உள்பட 80 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.68 வயதான டாக்டர் தேவராஜன் ஏற்கெனவே பி.சி.ராய் விருது பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |