முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லைஃப் ஆஃப் பை-க்கு ஆஸ்கர்: மகிழ்ச்சியில் புதுவை மக்கள்

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

புதுச்சேரி, பிப்.27 - புதுச்சேரியில் படமாக்கப்பட்ட  `லைஃப் ஆஃப் பை' திரைப்படத்துக்கு  4 ஆஸ்கர்  விருதுகள் கிடைத்ததற்கு  புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  புதுச்சேரி மாநிலத்தில்  கடந்த 2011 - ம் ஆண்டு  `லைஃப் ஆஃப் பை' திரைப்படம் படமாக்கப்பட்டது. ஹாலிவுட் இயக்குநர் ஆங்லீ இயக்கத்தில் புதுச்சேரி நகரிலும், கடற்பகுதியிலும்  என 16 இடங்களில் சுமார் 20 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படத்தில்  புதுச்சேரியில்  உள்ள தனியார் பள்ளியில்  9-ம் வகுப்பு  படிக்கும் மாணவர் கணேஷ் கேசவ் (14) நடித்திருக்கிறார்.  

தொடக்கத்தில், `பை' என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்த சூரஜ்  சர்மாவின்  வகுப்புத் தோழனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்த  கணேஷ் கேசவ், பின்னர் சூரஜூக்கான மாற்று நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார்.  புதுச்சேரி மற்றும்  மூணாறு பகுதிகளில்  படப்பிடிப்பு  நடந்த  போது இவர் உடன் இருந்தார்.  இந்த படத்துக்காகப் பல்வேறு  தேர்வுகளில்  பங்கேற்ற  பிறகே தேர்வு செய்யப்பட்டதாகவும் கேசவ் குறிப்பிட்டார்.  இப்படம் ஆஸ்கர்  விருது  வென்றதற்கு , கணேஷ் கேசவின் தாயார் எஸ்.மாயா, மாணவரின்  வகுப்பு ஆசிரியர்  ஜெ. அரவிந்தன், முதல்வர் உஷா பார்த்தசாரதி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  பள்ளிக்கு படக் குழுவினர்  வரும்போதே இப்படம் ஆஸ்கர் விருது பெறும் எனப் பலரும் தெரிவித்திருந்தனர். பலரது  எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்துக்கு  விருது  கிடைத்துள்ளது.  விருதுக்குப் பிறகு இயக்குநர் ஆங் லீ புதுவை வருவார்  என்று எதிர்பார்ப்பதாக  பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.  இதன் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளராக ஜி.எஸ்.ரவிச்சந்தர் பணியாற்றினார். இது குறித்து அவர்  கூறியது: ஆங் லீ, மிக திறமையான  இயக்குநர். அப்படத்தின்  படப்பிடிப்பின் போதே  விருதுகள்  பல கிடைக்கும் என எதிர்பார்த்தோம். கதைக்களமான  கடல், மனிதன், விலங்கு  என மூன்றுக்கும் இடையே நடக்கும் போராட்டம்  என்பது  மிக வித்தியாசமான  கதைக் கருவாக இருந்தது.  அதைப் படமாக்கிய  முறையும் மிக வித்தியாசமானதாக இருந்தது. `லைஃப்  ஆஃப் பை'  திரைப்படம் வெளியானபோதே அமோக வரவேற்பு  கிடைத்ததையொட்டி, அப்படத்தின்  பெயரை சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக  அரசு சார்பில் பயன்படுத்த  தொடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago