முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது புகார்

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.28 - மணிரத்னம் இயக்கிய கடல் படம் கடந்த 1-ந் தேதி ரிலீசானது. இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர். இந்த படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் கூறினர். மணிரத்னம் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

நேற்று காலை விநியோகஸ்தர் மன்னன் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடல் படத்தை வாங்கி விநியோகிப்பதற்கு முன்பு அதனை திரையிட்டு காட்டும்படி கோரினேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காண்பிக்க இயலாது என மணிரத்னம் மானேஜர் கூறிவிட்டார். 

மணிரத்னத்துக்காக படம் ஓடும் என்று நம்பி வாங்கலாம் என்று கிருஷ்ணா என்னிடம் கூறினார். இதனால் ரூ.20 கோடி கொடுத்து கடல் படத்தை வாங்கினேன். ஆனால் 3 கோடிதான் கிடைத்தது. 

மணிரத்னத்தை சந்தித்து நஷ்டம் பற்றி முறையிட பல தடவை முயற்சித்தோம். ஆனால் சந்திக்க முடியவில்லை. கிருஷ்ணா மிரட்டுகிறார். எனவே தொகையை வாங்கித்தர வேண்டும். கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago