முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் விடிய விடிய மழை:அதிபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவானது

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஏப்.- 23 - நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக அதிகபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவானது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தடுப்பு சுவர் இடந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பலியாயினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. மேலும் நேற்று காலையில் 8 மணி முதல் 12 மணி வரை நல்ல வெயில் அடித்தது. அதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஊட்டிக்கு குடிநீர் வழங்கும் அணைகள் உட்பட மாவட்டத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு:​

எமரால்டு- 32 மி.மீ.,கோடநாடு- 50 மி.மீ.,குன்னூர்- 74 மி.மீ., பர்லியார்- 52 மி.மீ.,கேத்தி- 52 மி.மீ., அவலாஞ்சி- 24 மி.மீ.,குந்தா பாலம்- 42 மி.மீ., கெத்தை-37 மி.மீ., ஊட்டி- 17 மி.மீ., கோத்தகிரி- 58 மி.மீ.,நடுவட்டம் 20.6 மி.மீ., அப்பர்பவானி- 25 மி.மீ., கிண்ணக்கொரை- 38 மி.மீ., தேவாலா மற்றும் கல்லட்டி- 10 மி.மீ., இதில் அதிகபட்சமாக குன்னூரில் 74 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago