முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி அட்டாக்ஸ் ஆப் 2611 சினிமா - பார்த்த அத்வானி கண்ணீர்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மார்ச். 2 - சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம் கோபால் வர்மா மும்பை தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுத்த படம் தி அட்டாக்ஸ் ஆப் 2611 ஆகும். இந்தப் படத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு போட்டுக் காட்டியுள்ளார் இயக்குனர். படத்தைப் பார்த்த அத்வானி அழுதே விட்டாராம்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். அதனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் கலங்காதவர். அவரது படங்கள் பிரச்சனை இன்றி ரிலீஸாகி விட்டால் அது தான் அதிசயம். 

பல்வேறு உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுத்த அவர் லேட்டஸ்டாக கையில் எடுத்தது மும்பை தாக்குதல்கள் சம்பவத்தை தான். பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களைத் தாக்கியதை தத்ரூபமாக படமாக்கி மனிதர் நேற்று ரிலீஸும் செய்து விட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!